திருடன் மீது மலர்ந்த காதல்... காதலன் பிரிவை தாங்க முடியாமல் பள்ளி மாணவி தற்கொலை

Youtube Video

பள்ளி திறப்பை முன்னிட்டும் ரோஷிணியின் எதிர்காலம் கருதியும் ரோஷிணியை அதிகாரிகள் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

 • Share this:
  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில், திருடன் மீது கொண்ட காதல் ஏக்கத்தால், 10ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி, தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அண்ணாசாலை வடக்குத் தெருவில் வசிப்பவர் பஞ்சவர்ணம் என்ற பெண்; இவரது கணவர் சீமான் சிங்கப்பூரில் பணிபுரிகிறார். இந்த தம்பதிக்கு 16 வயதான ஒரு மகன் உள்ளார். 10ம் வகுப்பு படித்து வந்த 15 வயது ரோஷிணி என்ற மகள் இருந்தார். வெள்ளிக்கிழமை அன்று, பஞ்சவர்ணம் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றுள்ளார்; மகன் பள்ளிக்கு சென்று விட்டார். அன்று மாலை அண்ணன் பள்ளி சென்று வீடு திரும்பிய நிலையில் மின்விசிறியில் சேலையால் தூக்கிட்ட நிலையில் தங்கை சடலமாகத் தொங்கியதைப் பார்த்து கதறியுள்ளார்.

  தேவகோட்டை நகர போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளி வர தொடங்கின. பஞ்சவர்ணம் இதற்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டம் ஓரியூர் அருகே உள்ள சிறுகம்பையூர் கிராமத்தில் வசித்து வந்தார். ஆர்எஸ் மங்கலம் அருகில் அறியாத மொழி கிராமத்தை சேர்ந்தவர் 24 வயது திலீபன். தனது சித்தியைப் பார்ப்பதற்காக சிறுகம்பை கிராமத்திற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார்.

  அப்போதுதான் ரோஷிணிக்கும் திலீபனுக்கும் பழக்கம் ஏற்ப்டடு காதலாக மாறியுள்ளது. திடீரென ஒரு நாள் ரோஷிணியைக் காணவில்லை; தாய் போலீசில் புகாரளித்த நிலையில், திலீபனையும் ரோஷிணியையும் கண்டுபிடித்துக் கொடுத்தனர் இதையடுத்துத் தான் பஞ்சவர்ணம் தேவகோட்டைக்கு குடிபெயர்ந்துள்ளார்.

  இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் ரோஷிணி மாயமாகியுள்ளார்l இப்போதும் திலீபனுடன் சேர்த்து அவரைக் கண்டுபிடித்த போலீசார், இந்த முறை மகளிர் காப்பகத்தில் தங்க வைத்தனர். பள்ளி திறப்பை முன்னிட்டும் ரோஷிணியின் எதிர்காலம் கருதியும் ரோஷிணியை அதிகாரிகள் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். திலீபனை மறக்க முடியாத நிலையில் அவரை நினைத்து ஏங்கியுள்ளார் ரோஷிணி.

  அதனால், தனது தற்கொலைக்கு பெற்றோர் காரணமில்லை எனவும், காதலன் பிரிவை என்னால் தாங்க முடியாத நிலையில் தற்கொலை செய்யப் போகிறேன் எனவும் கடிதம் எழுதி வைத்து விட்டு ரோஷிணி தன் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார் என்கின்றனர் போலீசார்

  போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், திலீபன் பல்வேறு திருட்டு வழக்குகளில் சிக்கியவர் என்பதும், தற்போது ஒரு திருட்டு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. காதலன் திருடனாயினும் அவரை மறக்க முடியாத பள்ளி மாணவி, தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
  மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

  மாநில உதவிமையம்: 104

  சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
   
  Published by:Vijay R
  First published: