தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 3,965 பேர் பாதிப்பு: 69 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 3,965 பேர் பாதிப்பு: 69 பேர் உயிரிழப்பு
(கோப்புப் படம்)
  • Share this:
தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 3,965 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 69 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு 1,34,226ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, ‘தமிழகத்தில் இன்று 36,628 பேருக்கு கொரோனா பாதிப்பு சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் மொத்தமாக 15,00,909 பேருக்கு கொரோனா பாதிப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று ஒரேநாளில் தமிழகத்தில் 3,907 பேருக்கும், வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து திரும்பிய 58 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 3,965 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் மொத்த கொரோனா பாதிப்பு 1,34,226 பேராக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,591 பேருக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


இதுவரையில் 85,915 பேருக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 69 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரையில் மொத்தமாக 1,898 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று சென்னையில் 1,185 பேருக்கும், செங்கல்பட்டில் 237 பேருக்கும், கன்னியாகுமரியில் 133 பேருக்கும், மதுரையில் 277 பேருக்கும், திருவள்ளூரில் 346 பேருக்கும், தூத்துக்குடியில் 175 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
First published: July 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading