சென்னையில் ரூ.2 கோடியில் பிளாஸ்மா வங்கி: பிளாஸ்மா சிகிச்சையின் நடைமுறைகள் என்ன?

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக சென்னையில் பிளாஸ்மா வங்கி தொடங்கப்பட்டுள்ளது.

சென்னையில் ரூ.2 கோடியில் பிளாஸ்மா வங்கி: பிளாஸ்மா சிகிச்சையின் நடைமுறைகள் என்ன?
ரத்தத்தில் இருந்து எடுக்கப்படும் ‘ப்ளாஸ்மா’. (கோப்புப் படம்)
  • Share this:
உலகையே முடக்கிப் போட்டிருக்கும் கொரோனாவை குணப்படுத்த மருந்துகள் இல்லாமல், உலக நாடுகள் செய்வதறியாது தவித்து வருகின்றன. இந்தியா உட்பட பல நாடுகளில் கொரோனோவிற்கான மருந்து கண்டுபிடிப்பு என்பது ஆராய்ச்சி நிலையிலேயே உள்ளது. இருந்த போதிலும் தமிழகத்தில் சித்த, ஆயுர்வேத மருத்துவமுறைகள் ஓராளவு கை கொடுக்கின்றன.

இந்நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகத்தின் ஆலோசனைப்படி, பிளாஸ்மா தெரபி என்ற முறை, சோதனை அடிப்படையில் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு அதில் வெற்றியும் கிடைத்துள்ளது. தற்போது பிளாஸ்மா தெரபி வங்கியும் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனோவில் இருந்து குணமடைந்தவர்கள் 14 நாட்களுக்கு பிறகு தங்களுடைய ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை 500 மில்லி லிட்டர் தானமாக கொடுக்கலாம். பிளாஸ்மா கொடுப்பது என்பது, நாம் ரத்த தானம் செய்யும் முறைபோன்ற ஒன்றாகும். அப்படி ரத்தத்தில் இருந்து பிரித்தெடுக்கப்படும் பிளாஸ்மாக்கள் தற்போது மிதமான கொரோனா பாதிப்புடன் உள்ள நோயாளிகளுக்கு செலுத்தப்படுகிறது. இதனால் மிதமான கொரோனா நோயாளிகளின் உடலில் ஆக்சிஜன் அளவு அதிகரித்து விரைவில் குணமடைகின்றனர்.


கொரோனோவில் இருந்து குணமடைந்த 18 வயது முதல் 65 வயது உடையவர்கள் 14 நாட்கள் இடைவெளியில் இரண்டுமுறை பிளாஸ்மாவை தானமாக கொடுக்கலாம். பிளாஸ்மா தானம் செய்ய 30 நிமிடங்களே போதும் என்கிறார் முதலில் தானம் அளித்த சதன்பிரபாகர் எம்எல்ஏ

 

மேலும் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இருதய நோய் உள்ளவர்கள் பிளாஸ்மா தானம் அளிக்க முடியாது என்று தெரிவிக்கும் மருத்துவர்கள், கொரோனோவில் இருந்து விடுபட்டு உடல் ஆரோக்யமாக உள்ளவர்கள், பிளாஸ்மாவை தானமாக கொடுக்க முன்வரவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர்.தமிழகத்தில் சோதனை அடிப்படையில் 26 பேருக்கு பிளாஸ்மா தெரபி கொடுக்கப்பட்டு, அதில் 24 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு தமிழக சுகாதாரத்துறை 2 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பில் சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கியை தொடங்கியுள்ளது. இந்த வங்கியில் கொடையாளர்களிடம் இருந்து பெறப்படும் பிளாஸ்மாவை 1 வருடம் வரை சேமித்து வைக்க முடியும்.
First published: July 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading