எடப்பாடி தொகுதி
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் 48 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இத்தொகுதியில் அதிமுக சார்பில் முதலமைச்சர் பழனிசாமி, திமுக தரப்பில் சம்பத் குமார், அமமுகவில் சேகர், மக்கள் நீதி மய்யம் சார்பில் தாசப்பராஜ், நாம் தமிழர் கட்சி தரப்பில் ஸ்ரீரத்னா உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இத்தொகுதியில் 20 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், 28 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
கொளத்தூர் தொகுதி
சென்னை கொளத்தூர் தொகுதியில் 55 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இதில் 38 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. திமுக தரப்பில் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக சார்பில் ஆதி ராஜாராம், அமமுக சார்பில் ஆறுமுகம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மக்கள் நீதி மய்யம் சார்பில் ஜெகதீஷ், நாம் தமிழர் கட்சியின் தரப்பில் செல்வா ஆகியோர் களம் காண்கின்றனர்.

மு.க.ஸ்டாலின்
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் அதன் தலைவர் கமல்ஹாசன் களம் இறங்குகிறார். பாஜக சார்பில் வானதி சீனிவாசனும், காங்கிரஸ் தரப்பில் மயூரா ஜெயக்குமார், அமமுக சார்பில் சேலஞ்சர் துரை உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இத்தொகுதியில் 21 பேரின் வேட்புமனுக்களை ஏற்கப்பட்டுள்ள சூழலில், 7 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
கோவில்பட்டி தொகுதி
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் 44 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 29 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இத்தொகுதியில் அதிமுக தரப்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, அமமுக சார்பில் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் களம் இறங்கியுள்ளனர்.

டிடிவி தினகரன்
மேலும் படிக்க...
அரசியலில் நடிகர்கள் வேண்டும் vs அரசியலில் நடிகர்கள் வேண்டாம்...
கன்னியாகுமரி தொகுதி
கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் 19 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்த நிலையில், 13 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்தும், பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் போட்டியிடுகின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்