நாங்குநேரி தொகுதி யாருக்கு சாதகம்?

நாங்குநேரி தொகுதி யாருக்கு சாதகம்?
  • News18
  • Last Updated: October 3, 2019, 8:29 AM IST
  • Share this:
நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதியில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் 6 முறையும், அதிமுக 5 முறையும், திமுக இரு முறையும், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் ஜனதா கட்சி தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

நாங்குநேரி சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த வசந்தகுமார், மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் அவர் மே 29-ல் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து வரும் 21-ம் தேதி இங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது

முதல் பொதுத்தேர்தல் நடைபெற்ற 1952-ம் முதல் அடுத்தடுத்து 1962 வரை 3 தேர்தல்களை நாங்குநேரி சட்டமன்ற தொகுதி சந்தித்த போது காங்கிரஸ் கட்சியே தொடர்ந்து வெற்றிபெற்றது. அதன் பின் 1967 முதல் 2016 வரை 12 தோ்தல்களை சந்தித்துள்ளது.


நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதியில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் 6 முறையும், அதிமுக 5 முறையும், திமுக இரு முறையும், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் ஜனதா கட்சி தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

பாரம்பரியமாக காங்கிரஸ் வசமுள்ள இத்தொகுதியில் திமுக - காங்கிரஸ் கூட்டணியே அதிகமுறை வெற்றிக்கொடி நாட்டியுள்ளன என்பது அக்கூட்டணிக்கு சாதக அம்சம்.

நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதியில், ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 25 ஆண் வாக்காளர்களளும் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 385 பெண் வாக்காளர்களும் மூன்றாம் பாலினத்தவர் 4 பேர் என மொத்தம் 2 லட்சத்து 56 ஆயிரத்து 414 வாக்களர்கள் உள்ளனர்.நாங்குநேரி தொகுதியில் 5 பேரூராட்சிகள் மற்றும் 3 ஒன்றியங்களையும் உள்ளடக்கியது. விவசாயத்தை முக்கிய ஆதாரமாக கொண்டுள்ள மக்கள் அதிக அளவில் வாழை பயிரிடுகின்றனர். அடுத்தபடியாக நெல், தென்னை உட்பட சிறு பயிர்களை பயிரிட்டுள்ளனா்.

கல்வி, வேலைவாய்ப்பு. வாழ்வாதாரம் என அனைத்திலும் நாங்குநேரி தொகுதி மிகவும் பின்தங்கியிருப்பதாகவும் இடைத்தேர்தலில் வெற்றிபெறும் வேட்பாளர் குறைகளைத் தீர்க்கவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

திமுக ஆட்சியில் நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம் கொண்டு வரப்பட்டு 20 ஆண்டுகளை கடந்தும், தற்போது பெரிய தொழிற்சாலைகள் இல்லை என்று ஆதங்கம் மக்களிடையே உள்ளது. மேலும், ரெட்டியார்பட்டியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும், குன்றத்தூரில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also watch

First published: October 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading