ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மாமல்லபுரம் அருகே துணை நகரம் - ஆளுநர் உரையில் வெளியான அறிவிப்பு

மாமல்லபுரம் அருகே துணை நகரம் - ஆளுநர் உரையில் வெளியான அறிவிப்பு

மாமல்லபுரம் அருகே துணை நகரம்

மாமல்லபுரம் அருகே துணை நகரம்

Governor RN Ravi | மாமல்லபுரம் அருகே துணை நகரம் அமைக்கப்படும் என சட்டப்பேரவை ஆளுநர் உரையில் தெரவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்த நிலையில், மாமல்லபுரம் அருகே துணை நகரம் அமைக்கப்படும் என்று ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக, தமிழ்நாடு முதல்வர் அறிவித்த 2030க்குள் ஒரு டிரில்லியன் பொருளாதாரத்தை அடைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், மதுரையில் 3வது தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க ரூ. 600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், காலை உணவுத் திட்டம் மூலம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயனடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், அனைத்துச் சமூகத்தினரும் ஒன்றாக வாழ வேண்டும் என்பதற்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி, பெரியார் சமத்துவபுரத்தைக் கொண்டு வந்ததாகத் தெரிவித்தார். இந்த பெரியார் சமத்துவபுரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 140 பெரியார் நினைவு சமத்துவபுரங்களைச் சீரமைக்க 190 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மினி டைடல் பார்க் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தொடங்கப்பட்டு வருவதாக கூறிய அவர், பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும், இதன் மூலம் மாநிலத்தின் வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார். மேலும், மாமல்லபுரம் அருகே துணை நகரம் அமைக்கப்படும் எனவும், கிழக்கு கடற்கரைச் சாலையில் அமையவுள்ள இந்த நகரம், சென்னையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கும் என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தமிழ்நாடு சட்டமன்றம் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரைக்காக கூடியது. சட்டமன்றத்திற்குள் ஆளுநர் வந்தபோது மற்றும் அதன் கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாடு வாழ்க, தமிழ்நாடு வாழ்க என முழக்கம் எழுப்பினர். என் இனிய சகோதர, சகோதரிகளே புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள் எனக் கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையைத் தொடங்கினார் ஆளுநர். ஆளுநர் உரை நிகழ்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி எம்.எல்.ஏ.க்கள் முழக்கம் எழுப்பியவாறு பேரவையின் மையப் பகுதிக்கு வந்து கண்டனங்களை பதிவு செய்தனர். பின்னர் வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவையில் உரையாற்றி ஆளுநர் தனது உரையில் திராவிட மாடல், சமூகநீதி, பெரியார், அண்ணா, அம்பேத்கர், மாநில மொழிகளை அலுவல் மொழியாக்குவது உள்ளிட்ட வார்த்தைகள் இருந்தபோதும் அதனை தவிர்த்துவிட்டார். ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு தமிழாக்கம் செய்தபோது இந்த வார்த்தைகள் இடம்பெற்றன. ஆளுநர் உரை முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தமிழ்நாடு அரசு தயாரித்த அறிக்கையை படிக்காமல் ஆளுநர் புறக்கணித்தது மிகவும் வருத்தம் அளிப்பதாக தெரிவித்த அவர், அச்சிடப்பட்டதை மீறி ஆளுநர் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார். முதலமைச்சர் பேசிக்கொண்டிருக்கும் போதே, தேசிய கீதம் இசைக்கும் முன்பு பாதியிலேயே ஆளுநர் வெளியேறினார். இதனால் சட்டசபை நிகழ்வுகள் இன்று பரபரப்பாகவே அமைந்தது.

First published:

Tags: CM MK Stalin, RN Ravi, Tamil Nadu