பொருளாதார இட ஒதுக்கீட்டை ஏற்கிறீர்களா? துரை முருகன் கேள்விக்கு ஓ.பன்னீர் செல்வம் பதில்
பொருளாதார இட ஒதுக்கீட்டை ஏற்கிறீர்களா? துரை முருகன் கேள்விக்கு ஓ.பன்னீர் செல்வம் பதில்
ஓ.பன்னீர் செல்வம்
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்படாவிட்டால் 10% இடஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்வோம் என்றும் அதனால் பாதிப்பு ஏற்பட்டால் அதனை நிராகரிப்போம் என்றும் ஒ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு பாதிப்பு ஏற்படவில்லையென்றால் பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்ளலாம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், அனைத்து கட்சி கூட்டம் மூலம் எடுக்கப்பட்ட முடிவு என்ன என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ‘69 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்தவர் ஜெயலலிதா என்றும், அதற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் சட்டவல்லுநர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்படாவிட்டால் 10% இடஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்வோம் என்றும் அதனால் பாதிப்பு ஏற்பட்டால் அதனை நிராகரிப்போம் என்றும் ஒ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.