‘இனவெறியினரின் இந்த இழிசெயல் கடும் கண்டனத்திற்குரியது’ - முள்ளிவாய்க்கால் நினைவு தூண் தகர்ப்புக்கு ஓ.பி.எஸ் கண்டனம்

போரில் உயிர்நீத்த தமிழர்களின் அடையாளமாக விளங்கிய நினைவுத் தூணை இலங்கை அரசு இரவோடு இரவாக ராட்சத இயந்திரங்களை கொண்டு இடித்துள்ளது.

போரில் உயிர்நீத்த தமிழர்களின் அடையாளமாக விளங்கிய நினைவுத் தூணை இலங்கை அரசு இரவோடு இரவாக ராட்சத இயந்திரங்களை கொண்டு இடித்துள்ளது.

  • Share this:
இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட
முள்ளிவாய்க்கால் நினைவு தூண், நள்ளிரவில் இடிக்கப்பட்டதற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், “இலங்கைப் போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாண பல்கலையில் அமைக்கப்பட்ட நினைவுத்தூண் நேற்று நள்ளிரவில் இடித்து தகர்க்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.ஈழப்போரில் ஈவு இரக்கமின்றி கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க போராடிக் கொண்டிருக்கிற வேளையில், தமிழர்களின் உணர்வை மேலும் ரணப்படுத்தும், இனவெறியினரின் இந்த இழிசெயல் கடும் கண்டனத்திற்குரியது.

ஏற்றுக்கொள்ள முடியாத இக்கொடுஞ்செயலை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

2009ம் ஆண்டு இறுதிக்கட்ட ஈழப்போரில், லட்சக்கணக்கான தமிழ்
மக்கள் கொல்லப்பட்டதை நினைவுகூறும் விதமாக, யாழ்ப்பாணம்
பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் கடந்த
2019ம் ஆண்டு மாணவர்களால் அமைக்கப்பட்டது.இந்நிலையில், போரில் உயிர்நீத்த தமிழர்களின் அடையாளமாக விளங்கிய நினைவுத் தூணை இலங்கை அரசு இரவோடு இரவாக ராட்சத இயந்திரங்களை கொண்டு இடித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு
தெரிவித்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மாணவர்கள்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: