மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக் விரைவில் நலம்பெற இறைவனை பிரார்த்திப்பதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
நகைச்சுவை நடிகர் விவேக் இன்று காலை சினிமா படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டிருந்தபோது அவருக்கு திடீர் என மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட அவர், அங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே
விவேக் நேற்று சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி குறித்து எவ்வித அச்சமும் தேவையில்லை. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்பும் கொரோனா வரும். ஆனால் உயிரிழப்புகள் போன்ற பெரிய பாதிப்புகள் இருக்காது என்று கூறியிருந்தார்.
நேற்று தடுப்பூசி போட்டுக் கொண்ட விவேக் இன்று மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளது, திரைப்பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இந்நிலையில், மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக் விரைவில் நலம்பெற இறைவனை பிரார்த்திப்பதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, மாரடைப்பு காரணமாக இன்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அன்புச் சகோதரர் நடிகர் விவேக் விரைவில் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.