குடிசைவாழ் மக்களுக்காக 6 லட்சம் வீடுகள் வழங்கப்பட்டுள்ளது: ஓ.பி.எஸ்!

படிப்படியாக 15 லட்சம் வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டு குடிசை வாழ் மக்களுக்கு வழங்கி குடிசை இல்லா மாநிலமாக தமிழகம் மாற்றப்படும் என்றும் துணை முதலமைச்சர் உறுதியளித்தார்.

குடிசைவாழ் மக்களுக்காக 6 லட்சம் வீடுகள் வழங்கப்பட்டுள்ளது: ஓ.பி.எஸ்!
ஓ.பன்னீர் செல்வம்
  • News18
  • Last Updated: July 9, 2019, 12:57 PM IST
  • Share this:
தமிழகத்தில் இதுவரையில் குடிசை பகுதிகளில் வசிபவர்களுக்காக, குடிசைமாற்று வாரியம் மூலம் 6 லட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படுள்ளதாக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் சாலை ஓரங்களில் வசிபவர்களுக்கு அரசு சார்பில் வீடு கட்டித்தர முன்வர வேண்டும் என திமுக சார்பில் துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் சேகர் பாபு சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து பேசினார்.

அதற்கு பதில் அளித்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 2023 தொலை நோக்கத்திட்டத்தின் கீழ் 15 லட்சம் குடிசை பகுதிகளில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு கட்டித்தர அரசு முடிவு செய்தது.


இதற்காக 75,000 கோடி நிதி திரட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. 400 சதுர அடி அளவில் ஆன 6 லட்சம் வீடுகள் இதுவரையில் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

மேலும், படிப்படியாக 15 லட்சம் வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டு குடிசை வாழ் மக்களுக்கு வழங்கி குடிசை இல்லா மாநிலமாக தமிழகம் மாற்றப்படும் என்றும் துணை முதலமைச்சர் உறுதியளித்தார்.

அதே நேரத்தில் உறுப்பினர் சேகர்பாபு விடுத்த கோரிக்கையின்படி சென்னையில் சாலை ஓரங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் படிப்படியாக வீடுகள் கட்டித்தரப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Loading...

Also see...

First published: July 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...