கொரோனா தடுப்பு பணிக்காக இதுவரை ரூ.7 ஆயிரம் கோடி செலவு - துணை முதலமைச்சர் தகவல்

கொரோனா தடுப்பு பணிக்காக இதுவரை ரூ.7 ஆயிரம் கோடி செலவு - துணை முதலமைச்சர் தகவல்

ஓ.பன்னீர் செல்வம்

கொரோனா தடுப்பு பணிக்காக இதுவரை ரூபாய் 7,167.97 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவிதுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
மருத்துவ உபகரணம் மற்றும் மருந்துகள் வாங்க 830.60 கோடி ரூபாயும், மருத்துவ கட்டுமான பணிக்காக 147.10 கோடி ரூபாய் கூடுதல் பணியாளர்களின் ஊதியம் மற்றும் உணவுக்காக 243.50 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா தடுப்பு சிகிச்சைக்காக 638.85 கோடி ரூபாயும், தனிமைப்படுத்துதலுக்காக 262.25 கோடி ரூபாயும், வெளி மாநில தொழிலாளர்களுக்காக 143.63 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.Also read... 1 முதல் 12ம் வகுப்பு வரை பாடத்திட்டம் குறைக்கும் பணி நிறைவு

நியாயவிலை அட்டைத்தாரர்களுக்கு இலவச பொருட்கள் வழங்கியது மற்றும் நல வாரியங்களுக்காக நல திட்டம் வழங்கியது 4,896.05 கோடி ரூபாய் என மொத்தம் கொரோனா தடுப்பு பணிக்காக 7,167.97 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

எனவே இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டிய தேவையில்லை என்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் குறிப்பிட்டார். நாளை தமிழக சட்டப்பேரவையில் கூடுதல் செலவினங்களுக்கான துணை மதீப்பிடுகளை துணை முதல்வர் தாக்கல் செய்கிறார்.
Published by:Vinothini Aandisamy
First published: