வீட்டுவசதி வாரிய அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஓ.பி.எஸ். ஆலோசனை..!

ஐந்தாயிரம் முகக்கவசங்கள் கோயம்பேடு சந்தைக்கு வருபவர்களுக்கு இலவசமாக வழக்கப்படுவதாகவும் எடுத்துரைக்கப்பட்டது.

வீட்டுவசதி வாரிய அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஓ.பி.எஸ். ஆலோசனை..!
ஐந்தாயிரம் முகக்கவசங்கள் கோயம்பேடு சந்தைக்கு வருபவர்களுக்கு இலவசமாக வழக்கப்படுவதாகவும் எடுத்துரைக்கப்பட்டது.
  • Share this:
தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் வீட்டுவசதி வாரிய முதன்மை செயலாளர் ராஜேஷ் லக்கானி, சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Also read... மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளியில் முதலமைச்சர் ஆலோசனை...!


இதில் 1 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்புகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தினந்தோறும் ஐந்தாயிரம் முகக்கவசங்கள் கோயம்பேடு சந்தைக்கு வருபவர்களுக்கு இலவசமாக வழக்கப்படுவதாகவும் எடுத்துரைக்கப்பட்டது.

Also see...
First published: April 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading