ரஜினிகாந்த் விரைவில் பூரண நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் - ஓ.பன்னீர்செல்வம்

ரஜினிகாந்த் விரைவில் பூரண நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் - ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம் - ரஜினிகாந்த்

ரஜினிகாந்தின் ரத்த அழுத்தத்தை பொறுத்து இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

 • Share this:
  ஐதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ரத்த அழுத்தம் காரணமாக சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்த் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

  சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த ' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. அண்ணாத்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்துகொண்டிருந்த நிலையில், கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது . படப்பிடிப்பு தளத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதேதேரத்தில் ரஜினிகாந்திற்கு தொற்று இல்லை எனவும் படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் விளக்கமளித்திருந்தனர்.

  ரஜினிகாந்த்துக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என்று வந்தது. இந்தநிலையில், ரஜினிகாந்த் ஹைதராபாத்திலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர் நேற்று அனுமதிக்கப்பட்டார். நடிகர் ரஜினிகாந்திற்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதால் அவரை மருத்துவக்குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாக அறிக்கை வெளியிட்டனர். மேலும் அவரது நலம்விரும்பிகள் யாரும் மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரிக்க வேண்டாமென்று கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

  நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் பெற வேண்டுமென அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ரஜினிகாந்த் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.  அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அன்புச்சகோதரர் திரு.ரஜினிகாந்த்  அவர்கள் விரைவில் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்“ என்றுள்ளார்.

  இதனிடையே ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து இன்று வெளியான மருத்துவ அறிக்கையில், ரத்த அழுத்தம் நேற்றை விட தற்போது சீராக உள்ளது. அவருடைய ரத்த அழுத்தத்தை பொறுத்து இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து முடிவெடுக்கப்படும். மேலும் ரஜினிகாந்தின் உடல்நிலை சீராகும் வரை ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
  Published by:Vijay R
  First published: