தமிழக பட்ஜெட் - வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு விரிவான விபத்துக் காப்பீடு

புதிய விரிவான காப்பீட்டு திட்டத்திற்காக 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் எனக்குறிப்பிட்ட ஓ.பன்னீர்செல்வம், விபத்து மூலம் ஏற்படும் நிரந்தர ஊனத்திற்கான காப்பீடு தொகை 1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் எனக்கூறினார்.

தமிழக பட்ஜெட் - வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு விரிவான விபத்துக் காப்பீடு
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
  • News18
  • Last Updated: February 8, 2019, 12:17 PM IST
  • Share this:
வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு விரைவில் விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில், மாநிலம் முழுவதையும் திட்டமிட்ட வளர்ச்சியின் கீழ் கொண்டு வருவதற்காக 9 நிலையான மண்டலங்களாக பிரித்து, மண்டலத் திட்டங்கள் தயார் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

மாநிலம் முழுமைக்குமான ஒரு முன்னோக்கு திட்டத்தையும் 2 ஆண்டுகளுக்குள் நகர் ஊரமைப்பு இயக்ககம் மூலம் தயார் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.


தமிழக பட்ஜெட் செய்திகளை நேரலையாக பார்க்க கிளிக் செய்க...

2000 கோடி ரூபாய் செலவில் சென்னையில், விரிவான ஒருங்கிணைக்கப்பட்ட வாகன நிறுத்த மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும் எனக்கூறிய ஓ.பன்னீர்செல்வம், 2 லட்சம் நான்கு சக்கர வாகனங்கள், 2 லட்சம் இருசக்கர வாகனங்கள் நிறுத்தக்கூடிய அளவில் நிலத்தடி வாகன நிறுத்த வசதிகள், பன்னடுக்கு வாகன நிறுத்த வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றார்.

வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்காக ஆயிரத்து 31 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார். வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு விரைவில் விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் இந்த புதிய திட்டம் மூலம் காப்பீட்டுத் தொகை இரண்டு லட்சம் ரூபாயில் இருந்து 4 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.புதிய விரிவான காப்பீட்டு திட்டத்திற்காக 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் எனக்குறிப்பிட்ட ஓ.பன்னீர்செல்வம், விபத்து மூலம் ஏற்படும் நிரந்தர ஊனத்திற்கான காப்பீடு தொகை 1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் எனக்கூறினார்.

Also see...

First published: February 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading