நகர ஊரமைப்பு திட்டம் பற்றி துணை முதலமைச்சர் ஆய்வு - கட்டடங்களுக்கு உரிய வகையில் அனுமதி தர அறிவுரை

நகர ஊரமைப்பு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களை விரைந்து முடிக்குமாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தியுள்ளார்.

நகர ஊரமைப்பு திட்டம் பற்றி துணை முதலமைச்சர் ஆய்வு - கட்டடங்களுக்கு உரிய வகையில் அனுமதி தர அறிவுரை
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
  • Share this:
சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நகர ஊரமைப்பு துறை மாவட்ட அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, கட்டடங்களுக்கு உரிய வகையில் அனுமதி வழங்க வேண்டும், நிலங்களை வகைப்படுத்துதலை சரிவர மேற்கொள்ள வேண்டும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கேட்டுக் கொண்டார்.

Also read: சென்னை விமானநிலைய உள்நாட்டு முனையத்தில் அதிகரித்த பயணிகள் எண்ணிக்கை

புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் மாவட்ட அலுவலக பணிகளை துரிதப்படுத்துதல், பணியாளர்களை நியமிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், விண்ணப்பதாரரின் பணிகளை விரைவாக முடிக்க ஒரு முறை மட்டுமே தகவல்களைக் கேட்டுப் பெற வேண்டும் என்றும் தேவைப்படும் பட்சத்தில் மட்டும் இ-மெயில் மூலம் தகவல்களைப் பெற்றுக் கொள்ளும்படியும் அதிகாரிகளுக்கு ஓ,பன்னீர் செல்வம் அறிவுறுத்தினார்.
First published: August 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading