சிறுபான்மை மக்களிடம் இருந்து அ.தி.மு.கவை பிரித்துவிடலாம் என்று எண்ணும் மு.க.ஸ்டாலினின் சூழ்ச்சி, எந்தக் காலத்திலும் நிறைவேறாது என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் என சூளுரைத்துள்ளார்.
வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக, வேலூரில் நடைபெற்றத் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசுகையில், தங்களை செயல்படாத அரசு என்று கூறும் மு.க.ஸ்டாலின், கொஞ்சம் திரும்பி பார்த்தால் உங்களின் முதுகில் எவ்வளவு அழுக்கு உள்ளது என தெரியும் என பதிலடி கொடுத்தார். மேலும், பிரித்தாளும் சூழ்ச்சி ஈடேறாது எனவும் சூளுரைத்தார்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் நடைபெற்ற அ.தி.மு.க பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய தங்கமணி, சில செய்தித் தாள்களில் தன்னைப் பற்றி உண்மைக்கு புறம்பாக செய்தி வெளியானதாக கூறினார்.
இதனிடையே, தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வேலூரில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். வளத்தூர் கிராமத்திற்கு சென்ற அவர் ஆலமரத்தடியில் கிராம மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து வாக்கு சேகரித்தார்.
மேல்பட்டி பகுதியில் பிரசாரம் செய்த உதயநிதி, விரைவில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராவதற்கான முன்னோட்டமே இந்த தேர்தல் என்று தெரிவித்தார்.
வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து அமைச்சர்கள் அன்பழகன், விஜயபாஸ்கர், நிலோஃபர் கபில் ஆகியோர் பிரசாரம் மேற்கொண்டனர்.
அப்போது பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மு.க.ஸ்டாலின் கட்டம் சரியில்லாதவராக உள்ளதாகவும், எவ்வளவு முயன்றாலும் அவரால் முதலமைச்சராக முடியாது என்றும் விமர்சித்தார்.
வேலூர் தேர்தல் நெருங்கி விட்டதால் பிரதான கட்சிகளான அ.தி.மு.க மற்றும் தி.மு.க பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளன. இதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்துள்ளன.
அத்துடன், பண விநியோகம் உள்ளிட்ட விதிமுறை மீறல்களைத் தடுக்க தேர்தல் அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Also see...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.