பண்ணை வீட்டில் கட்சி நிர்வாகிகளுடன் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் ஆலோசனை

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள பண்ணை வீட்டில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அமைச்சர் ஆர்பி உதயகுமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பண்ணை வீட்டில் கட்சி நிர்வாகிகளுடன் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் ஆலோசனை
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.
  • Share this:
அதிமுகவில் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றதாக தகவல் வெளியான நிலையில், அதன்பின் நடைபெற்ற அரசு விழாக்களில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்காமல் தவிர்த்து வந்தார்.

இந்நிலையில், தனது பேரனின் பிறந்த நாள் விழாவிற்காக ஓ.பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை பெரியகுளம் சென்றார். அதைத்தொடர்ந்து நேற்று காலை முதல் கைலாசபட்டியில் உள்ள பண்ணை வீட்டில் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.Also read: உதிரிபாகங்கள் இறக்குமதி வரி உயர்வு எதிரொலி: ஸ்மார்ட்போன் விலை 5% வரை அதிகரிக்கும் என தகவல்


தேனி மட்டுமின்றி சென்னை, திருப்பூர், திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதற்கிடையே, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், எம்.எல்.ஏக்கள் மாணிக்கம், சரவணன், உசிலம்பட்டி எம்எல்ஏ நீதிபதி ஆகியோர் மாலையில் சந்தித்து பேசினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், இது அரசியலற்ற சந்திப்பு என தெரிவித்தார்.
First published: October 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading