முகப்பு /செய்தி /தமிழ்நாடு / துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதி

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதி

ஓ.பன்னீர் செல்வம்

ஓ.பன்னீர் செல்வம்

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உடல் பரிசோதனைக்காக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  • Last Updated :

ஆளும் அ.தி.மு.க கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், தமிழகத்தின் துணை முதல்வராகவும் இருப்பவர் ஓ.பன்னீர் செல்வம். அவர், கடந்த மே மாதம் 24-ம் தேதி சென்னை அமைந்தகரையிலுள்ள எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உரிய மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு மே 25-ம் தேதியன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்தநிலையில், 3 மாதங்கள் கழித்து மீண்டும் ஓ.பன்னீர் செல்வம் மருத்துவமனையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

top videos

    தற்போது அவர் இதயவியல் சிகிச்சைக்காக மீண்டும் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இதயத்துக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டு இன்று மதியமோ அல்லது மாலையோ அவர் வீடு திரும்புவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

    First published:

    Tags: O Panneerselvam, OPS