அரபிக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி... தமிழகம், கர்நாடகா, கேரளாவில் 4 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு..

மாதிரிப் படம்

அரபிக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால், தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 • Share this:
  அரபிக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால், தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மேலும் படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின்னர் புயலாக மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

  அதன்படி, வெள்ளிக்கிழமை முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, கன்னியாகுமாரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் சூறை காற்றுடன் மிக கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க... புதுச்சேரியில் கொரோனா நோயாளிகளுக்கு தரையில் படுக்க வைத்து சிகிச்சை...

  சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தென்கிழக்கு அரபிக்கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: