ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னை அருகே நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் - வானிலை ஆய்வு மையம்

சென்னை அருகே நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் - வானிலை ஆய்வு மையம்

மழை

மழை

சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டையில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை வலுவிழக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 5.30 மணியளவில் காரைக்காலில் இருந்து கிழக்கு-வடகிழக்கு திசையில் 490 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து கிழக்கே 450 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

    இது மேற்கு-வடமேற்கு திசையில் தெற்கு ஆந்திரா, தமிழகம்-புதுச்சேரி கடற்கரை நோக்கி நகர்ந்து, நாளை காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக, இன்று தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டையில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    'பலிகடாவாகும் தமிழ்.. நித்தியானந்தாவுக்கு ஏன் அழைப்பில்லை?'.. 'காசி தமிழ் சங்கமம்' குறித்து முரசொலி விமர்சனம்! 

    நாளை திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Chennai rains, Meteorological dept, Rain Update