Home /News /tamil-nadu /

வங்க கடலில் நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

வங்க கடலில் நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

Weather Update : வங்க கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மன்னார் வளைகுடா மற்றும் உள்தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் இன்றும் , நாளையும் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, தென் கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டியுள்ள வங்க கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி, நாளை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Must Read : கொரோனா விதிகளை காற்றில் பறக்க விட வேண்டாம் - சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை

    இதன் காரணமாக இன்றும், நாளையும் தென்மேற்கு வங்ககடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 கி.மீ. முதல் 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்றுடன் கன மழை பெய்தது. சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் பெய்த மழையால் சாலை ஓரங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், பூமி குளிர்ந்து வெப்பம் சிறிதளவு தணிந்ததாக விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Rain Forecast, Weather News in Tamil

    அடுத்த செய்தி