Home /News /tamil-nadu /

அறிவியல் திருவிழா - மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை அறிவிப்பு!

அறிவியல் திருவிழா - மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை அறிவிப்பு!

அறிவியல் திருவிழா

அறிவியல் திருவிழா

அரசு அறிவித்துள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து இந்த அறிவியல் திருவிழா நடைபெற உள்ளது. இது குறித்த மேலும் தகவல்களை https://vigvanpujyate.in/ என்ற இணைய தளத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

  • News18
  • Last Updated :
பிப்ரவரி 22ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை ஒரு வாரகாலம் "அறிவியல் திருவிழா" நடைபெறும் என மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை அறிவித்துள்ளது.

ஆண்டுதோறும் பிப்ரவரி 28-ம் தேதி தேசிய அறிவியல் நாள் கொண்டாடப்படும் நிலையில், இந்தாண்டு பிப்ரவரி 22-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஒரு வாரகாலம் "அறிவியல் திருவிழா" நடைபெற உள்ளது.

இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் நடைபெற்றது. அப்போது செய்தியாளரை சந்தித்த மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் விஞ்ஞானி டி.வி.வெங்கடேசன் பேசியதாவது:

சர்.சி.வி. ராமன் தன்னுடைய புகழ்மிக்க 'ராமன் விளைவு' குறித்து 1928-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி உலகிற்கு அறிவித்த நாள். அவரின் இந்த கண்டுபிடிப்புக்கு 1930-ம் ஆண்டில் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதனை கொண்டாடும் வகையில் பிப்ரவரி 28-ம் தேதி தேசிய அறிவியல் நாளாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

இந்தியா சுதந்திரம் பெற்று 75-ம் ஆண்டு பெருவிழா கொண்டாடி வரும் நிலையில் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் சார்பில் ஒரு வாரகாலம் "அறிவியல் திருவிழா" அனுசரிக்கப்பட உள்ளது. மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் பல்வேறு நிறுவனங்கள் ஒத்துழைப்புடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

அறிவியல் தொழில்நுட்பத் துறையில் அடுத்த 25 ஆண்டுகளில் எந்த மாதிரியான மாற்றங்கள் ஏற்பட உள்ளன என்பது குறித்த விவரங்கள் இந்த கண்காட்சியில் இடம்பெறும். நவீன இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் சாதனைகள், கண்டுபிடிப்புகள், புதுமைகள் குறித்த முக்கிய அம்சங்கள் இடம் பெற்றிருக்கும். மேலும் அறிவியல் இலக்கியம் சார்ந்த நிகழ்வுக்கும், பாடல், புத்தக வாசிப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஒரு வார கால நிகழ்வு என்பது இந்தியாவில் உள்ள 75 இடங்களில் நடைபெற இருக்கிறது. இந்திய சுதந்திர பெற்று 75வது சுதந்திர ஆண்டு என்ற இந்த முக்கியமான ஆண்டை நினைவு கூறும் விதத்தில் 75 இடங்கள், 75 அறிவியல் திரைப்படங்கள், 75 போஸ்டர்கள், 75 புத்தகங்கள் மற்றும் புத்தக கண்காட்சிகள் நடைபெற உள்ளன.  இந்த கொண்டாடங்கள் ஒரு வாரம் மட்டுமல்லாது தொடர்ந்தும் நடைபெறும். தமிழ்நாட்டில் சென்னை திருச்சி மதுரை கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் உள்ள அறிவியல் தொழில்நுட்பம் மையங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் அறிவியல் திருவிழா அனுசரிக்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் இந்த நிகழ்ச்சிகளை, தமிழக அரசின் தமிழ்நாடு அறிவியல் கன் தொழில்நுட்ப மையம் ஒருங்கிணைத்து நடத்துகிறது. இந்த நிகழ்வுகளை நடத்துவதற்கு, பல்வேறு அமைப்புகள் கல்வி நிறுவனங்கள் முன் வந்துள்ளன. அறிவியல் பலகை அமைப்பும் இந்த முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு செயலாற்றி வருகிறது. மேலும்  இக்கண்காட்சியில் அறிவியல் இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளுக்கும், பாடல் புத்தக வாசிப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Also read... உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றி பெறட்டும், அதன் பிறகு ஆட்சி அமைப்பதை பார்த்துக் கொள்ளலாம் - அமைச்சர் மா.சு

அரசு அறிவித்துள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து இந்த அறிவியல் திருவிழா நடைபெற உள்ளது. இது குறித்த மேலும் தகவல்களை https://vigvanpujyate.in/ என்ற இணைய தளத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் செயல் இயக்குனர் சௌந்தரராஜ பெருமாள் மற்றும் பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் அதிகாரி லெனின் தமிழ்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Published by:Vinothini Aandisamy
First published:

அடுத்த செய்தி