தமிழகத்தில் 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த பள்ளிக்கல்வி துறை முடிவு

தமிழகத்தில் 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த பள்ளிக்கல்வி துறை முடிவு

மாணவர்கள் - மாதிப்படம்

தமிழகத்தில் 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த பள்ளிக்கல்வி துறை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 • Share this:
  கொரோனா காரணமாக மாணவர்கள் நேரடியாக பள்ளிகளுக்கு சென்று வகுப்புகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு வரும் திங்கட்கிழமை முதல் பயிற்சி புத்தகம் ஒன்று வழங்கப்பட உள்ளது. அந்த பயிற்சி புத்தகத்தை மாணவர்கள் முழுவதும் பயில்வதற்கு ஆசிரியர்கள் அறிவுறுத்துவார்கள்.

  இதனையடுத்து மாணவர்களுக்கு வாட்ஸ்அப் வாயிலாக அந்தப் புத்தகத்தில் உள்ள கேள்விகளை அனுப்பி அதன்மூலம் பதிலை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.. ஒவ்வொரு பாடத்திலும் அந்தந்த பாடத் தலைப்புகளிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு மாணவர்களின் திறன் அறியப்பட உள்ளது..

  இந்தத் தேர்வு மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை வைத்தே ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை பத்தாம் வகுப்பில் அனுமதிப்பது குறித்து பத்தாம் வகுப்பு மாணவர்களை பதினோராம் வகுப்பில் அனுமதிப்பது குறித்து முடிவு செய்ய உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  ஏற்கனவே பன்னிரண்டாம் வகுப்பு தவிர்த்து அனைத்து மாணவர்களுக்கும் அரசு தேர்ச்சி வழங்கியுள்ள நிலையில் தற்போது மாணவர்களின் திறனை அறிய பள்ளி அளவில் ஒரு தேர்வு நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது
  Published by:Vijay R
  First published: