ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னையை நோக்கி நகரும் அடர் மேகங்கள்... மழை வெளுக்கும்.. அலெர்ட் கொடுத்த வெதர்மேன்!

சென்னையை நோக்கி நகரும் அடர் மேகங்கள்... மழை வெளுக்கும்.. அலெர்ட் கொடுத்த வெதர்மேன்!

சென்னையை நோக்கி நகரும் அடர் மேகங்கள்

சென்னையை நோக்கி நகரும் அடர் மேகங்கள்

கடந்த 4 நாள் மழையின் சித்திரவதையில் முதன்முறையாக இவ்வளவு அடர்த்தியான மேகங்கள் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக அருகில் வந்துள்ளது. இது நிச்சயம் கடும் மழையைத் தந்து நமக்கு மனச்சோர்வை ஏற்படுத்த வல்லது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

கடந்த ஒரு வாரமாக வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழக பகுதியில் உதயமான வறண்ட காற்றால் வலுப்பெறாமல் இருந்தது. கடந்த 4 நாட்களாக தமிழகத்தின் வடகிழக்கு பகுதியில் மெதுவாக கரையை கடந்து வருகிறது.

நேற்று சென்னை பகுதியில் நிலைகொண்ட தாழ்வு பகுதி கரையை கடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதன்வேகம் இன்னும் குறைந்து வருகிறது. நேற்றைய தினம் சென்னை, அதை சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை பகுதிகளிலும் ஆந்திர எல்லையிலும் மழை விடாமல் பெய்யும் பின்னர் கரை கடந்து விடும் என்று தமிழக வெதர்மேன் கணித்திருந்தார்.

தற்போது அந்த காற்றழுத்த பகுதி மேலும் தனது வேகத்தை குறைத்துக் கொண்டு சென்னையிலேயே தங்கி விட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : அண்ணாமலையார் கார்த்திகை தீபத் திருவிழா: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட திருவண்ணாமலை ஆட்சியர்

இன்று காலை தமிழக வெதர்மேன் பிரதீப் வெளியிட்ட வானிலை கணிப்புப்படி, “காற்றழுத்த தாழ்வு நிலை இன்னும் சென்னையின் வட தமிழக கடற்கரையில் உள்ளது. மேலும் அதன் நகர்வு மிகவும் மெதுவாகவும் உறுதியாகவும் உள்ளது.

இந்த தாழ்வு நிலையை சுற்றி 3 பக்கங்களில் மேகங்கள் இல்லாமல் எலும்புக்கூடு போல காணப்படுகிறது. ஆனால் காற்றழுத்த தாழ்வு நிலையின் வடமேற்கு பகுதியில் அடர்ந்த மேகங்கள் காணப்படுகின்றன. அதோடு அந்த மேகங்கள் மெதுவாக கடற்கரைக்கு அருகில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலை நோக்கி நகர்கிறது.

கடந்த 4 நாள் மழையின் சித்திரவதையில் முதன்முறையாக இவ்வளவு அடர்த்தியான மேகங்கள் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக அருகில் வந்துள்ளது. இது நிச்சயம் கடும் மழையைத் தந்து நமக்கு மனச்சோர்வை ஏற்படுத்த வல்லது.

ஒரே மன ஆறுதல் என்னவென்றால் சூரியன் வந்துவிட்டது. அதன் வெப்பத்தால் , வெப்ப காற்றால் அருகில் வரும் இந்த பெரிய மேகங்கள் நிலைத்து நிலத்திற்கு செல்ல முடியுமா என்பது சந்தேகமே. அதனால் காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெறாமல் போக வாய்ப்புகள் உண்டு. காற்றின் வேகத்தை பொறுத்து பாப்போம் என்று தெரிவித்துள்ளார்.


Published by:Ilakkiya GP
First published:

Tags: Weather News in Tamil