டெங்கு காய்ச்சல் பாதிப்பு! மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகள் அதிகரிப்பு

டெங்கு காய்ச்சல் பாதிப்பு! மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகள் அதிகரிப்பு
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: October 1, 2019, 9:50 PM IST
  • Share this:
தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், சென்னை எழும்பூர் குழந்தைகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மழை காரணமாக டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்கள் பரவத் தொடங்கியுள்ளன.

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு பொதுவாகவே நாள் ஒன்றுக்கு 60 முதல் 70 குழந்தைகள் சிகிச்சைக்காக வரும் நிலையில், காய்ச்சல் காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து வரப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 100 முதல் 150 வரை அதிகரித்துள்ளது. இதனால் காய்ச்சலுக்கான சிறப்பு வார்டு அமைக்கபட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது.


Also see:

First published: October 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...