• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு: மருத்துவரை ஆலோசிக்காமல் நேரடியாக மருந்துகளை வாங்கி உட்கொள்ள வேண்டாம்: மருத்துவர்கள் எச்சரிக்கை

அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு: மருத்துவரை ஆலோசிக்காமல் நேரடியாக மருந்துகளை வாங்கி உட்கொள்ள வேண்டாம்: மருத்துவர்கள் எச்சரிக்கை

அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு: மருத்துவரை ஆலோசிக்காமல் நேரடியாக மருந்துகளை வாங்கி உட்கொள்ள வேண்டாம்: மருத்துவர்கள் எச்சரிக்கை

அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு: மருத்துவரை ஆலோசிக்காமல் நேரடியாக மருந்துகளை வாங்கி உட்கொள்ள வேண்டாம்: மருத்துவர்கள் எச்சரிக்கை

தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும், மருத்துவரை ஆலோசிக்காமல் நேரடியாக மருந்துகளை வாங்கி உட்கொள்ள வேண்டாம் எனவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

  • Share this:
    நல்ல தண்ணீரில் உருவாகக்கூடிய ஏடிஸ் கொசுக்கள் மூலம், டெங்கு வைரஸ் பரவுகிறது. பகல் நேரங்களில் மட்டுமே இந்த கொசுக்கள் கடிக்கும் என்பதால், வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் பொதுவான அறிவுரை ஆகும்.

    கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், நாடு முழுவதும் சத்தம் இல்லாமல் டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்க உள்ள நிலையில், கடந்த ஆண்டை காட்டிலும், டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்திருப்பது புள்ளி விவரம் மூலம் தெரியவந்துள்ளது.

    தமிழகத்தில், கடந்த ஆண்டு இரண்டாயிரத்து 410 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.

    ஆனால் நடப்பாண்டில் ஜனவரி முதல் செப்டம்பர் வரை இரண்டாயிரத்து 657 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 19ம் தேதி வரை, 240 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

    தினமும் சுமார் 30 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவதாகவும், சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இந்தாண்டு மட்டும் டெங்குவால் பாதிக்கப்பட்டு 354 குழந்தைகள் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    டெங்குவால் பாதிக்கப்பட்ட நபருக்கு 7 நாட்கள் காய்ச்சல் இருக்கும் என்றும், முதல் 3 நாட்கள் கடுமையான காய்ச்சல் ஏற்படும் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பருவமழைக் காலங்களில் மட்டுமே பரவும் நோயாக இருந்த டெங்கு, தற்போது எல்லா காலங்களிலும் பரவுவதாக தெரிவிக்கும் மருத்துவர்கள், வீட்டின் அருகே தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.

    டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் மருந்துக் கடைகளுக்கு நேரடியாக சென்று மருந்துகளை வாங்கக் கூடாது எனவும், அப்படி உட்கொள்ளப்படும் மருந்துகளால் ரத்த நாளங்களில் கசிவு ஏற்படலாம் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மருத்துவரை ஆலோசித்து முறையான சிகிச்சை பெற்றால்தான் டெங்கு குணமாகும் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. எனினும் பகல் நேர கொசுக்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: