முகப்பு /செய்தி /தமிழ்நாடு / Dengue Fever | தென் மாவட்டங்களில் வேகமாக பரவும் டெங்கு.. கொரோனாவுக்கும் டெங்குவுக்கும் என்ன வித்தியாசம்?

Dengue Fever | தென் மாவட்டங்களில் வேகமாக பரவும் டெங்கு.. கொரோனாவுக்கும் டெங்குவுக்கும் என்ன வித்தியாசம்?

Dengue Fever | தென் மாவட்டங்களில் வேகமாக பரவும் டெங்கு.. கொரோனாவுக்கும் டெங்குவுக்கும் என்ன வித்தியாசம்?

தென் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவும் நிலையில், தமிழ்நாட்டில் ஜூன் 30ம் தேதி வரை, 2090 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழ்நாட்டில் இந்தாண்டு தேனி, தென்காசி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகளவில் ஏற்பட்டுள்ளது. 6 மாதங்களில், 2090 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்ட சூழலில், ஜூன் மாதம் மட்டும் 82 பேர் பாதிக்கப்பட்டனர்.

கடந்த 6 மாதங்களில் அதிகபட்சமாக தேனியில் 282 பேருக்கும், மதுரையில் 260 பேர், தென்காசியில் 167 பேர், கோவையில் 175 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் 6 மாதங்களில் 60 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 6 ஆண்டுகளில் 2020ம் ஆண்டில் தான் குறைவான பாதிப்பு பதிவாகியுள்ளது. இதே போன்று கடந்த ஆண்டு தான், டெங்கு மரணங்கள் பதிவாகாத ஆண்டாகும். கடந்த ஆண்டு முழுவதிலுமே 2410 பேருக்கு தான் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு ஆறு மாதங்களிலேயே 2090 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு இருந்தாலும், டெங்கு பணிக்கு மட்டுமே 21000 சுகாதார களப்பணியாளர்கள் உள்ளதாகவும், டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது என்பது தவறான செய்தி என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் படிக்க...கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு மறதி.. மருத்துவர்கள் விளக்கம்!!

கொங்கு மண்டலத்தை டார்கெட் செய்யும் அரசியல் கட்சிகள்.. காரணம் என்ன?

இந்நிலையில் டெங்குவுக்கும், கொரோனாவுக்கு முதல்கட்ட அறிகுறிகள் ஒரே மாதிரியாக இருக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். டெங்கு நோயாளிகளுக்கு கண்களுக்கு பின்னால் வலி மற்றும் நெற்றி பகுதியிலும் வலி ஏற்படும் எனவும் கூறுகின்றனர்.

' isDesktop="true" id="501357" youtubeid="0G47XRugKg8" category="tamil-nadu">

கொரோனாவை போல டெங்குவும் பல உறுப்புகளை பாதிக்கக்கூடும் என தெரிவிக்கும் மருத்துவர்கள், 3 நாட்கள் தொடர்ந்து அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என அறிவுறுத்துகின்றனர். அறிகுறிகள் தென்பட்ட பின், ரத்த பரிசோதனை மூலம் 5வது நாளில் டெங்குவை உறுதி செய்யலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

First published: