தென் மாவட்டங்களில் அதிகம் பரவும் டெங்கு காய்ச்சல்!

தென் மாவட்டங்களில் அதிகம் பரவும் டெங்கு காய்ச்சல்!

தமிழ்நாட்டில் கடந்த ஆறு ஆண்டுகளில் 2020ம் ஆண்டில் தான் குறைவான பாதிப்பு பதிவானது. அதே போன்று கடந்த ஆண்டு தான் டெங்கு மரணங்கள் பதிவாகாத ஆண்டாகும்.

  • Share this:
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் டெங்கு நோய் அதிகம் பரவி வருகிறது. தமிழகத்தில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை 2090 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு இருந்தது. இதில் ஜூன் மாதத்தில் மட்டும் புதிதாக 82 பேருக்கு டெங்கு பாதிக்கப்பட்டிருந்தது.

இந்த ஆண்டு இதுவரை கண்டறியப்பட்ட பாதிப்புகளில் தேனி, தென்காசி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலேயே அதிகமான பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக தேனியில் 282 பேருக்கும், மதுரையில் 260 பேருக்கும், தென்காசியில் 167 பேருக்கும், கோவையில் 175 பேருக்கும், கடந்த ஆறு மாதங்களில் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 6 மாதங்களில் 60 பேருக்கு டெங்கு கண்டறியப்பட்டுள்ளது.

தேனி -282
மதுரை -267
தென்காசி -260
நெல்லை -193
கோவை-175
சென்னை -60
தமிழ்நாடு -2090

தமிழ்நாட்டில் கடந்த ஆறு ஆண்டுகளில் 2020ம் ஆண்டில் தான் குறைவான பாதிப்பு பதிவானது. அதே போன்று கடந்த ஆண்டு தான் டெங்கு மரணங்கள் பதிவாகாத ஆண்டாகும். கடந்த ஆண்டு முழுவதிலுமே 2410 பேருக்கு தான் மாநிலத்தில் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு ஆறு மாதங்களிலேயே 2090 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த ஆறு ஆண்டுகளில் பஞ்சாப், குஜராத், மேற்கு வங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களில் தான் நாட்டிலேயே அதிக பாதிப்பு பதிவாகியது. ஆனால் இந்த ஆண்டு கடந்த ஆறு மாத நிலவரப்படி தமிழ்நாட்டில் தான் அதிக பாதிப்பு பதிவாகியுள்ளது. இதற்கு காரணம் அதிக பரிசோதனைகளே என்று பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

"தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு இருந்தாலும் டெங்கு பணிக்கு மட்டுமே 21 ஆயிரம் சுகாதார களப்பணியாளர்கள் உள்ளன. டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது என்பது தவறான செய்தியாகும். வழக்கமாக பதிவாகும் எண்ணிக்கையிலேயே பாதிப்பு கண்டறியப்படுகிறது" என்று பொது சுகாதார அதிகாரிகள் விளக்கமளிக்கின்றனர்.

இந்நிலையில் டெங்குவுக்கு கொரோனாவுக்கு ஒரே மாதிரியான முதல் கட்ட அறிகுறிகள் இருக்கும் என்பதால் இவற்றை பிரித்து அறிவது எப்படி என்று மருத்துவர்கள் விளக்குகின்றனர். டெங்குவுக்கு கொரோனாவுக்கும் அறிகுறி பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருக்கும். காய்ச்சல் உடல் வலி சோர்வு ஆகியவை இரண்டு நோய்களுக்கும் தென்படும்.

Also read: பாஜகவின் சித்தாந்தத்தை தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்துச் செல்லும் வரை நாங்கள் ஓயமாட்டோம்: பாஜக தலைவர் அண்ணாமலை

டெங்குவை போலல்லாமல் நோயாளிகளுக்கு மூன்றாவது நாள் முதல் அதிக இருமல் காணப்படலாம் டெங்குவில் இருமல் அதிகமாக இருக்காது. டெங்கு நோயாளிகளுக்கு கண்களுக்கு பின்னால் வலி மற்றும் நெற்றி பகுதியிலும் வலி இருக்கலாம்.

டெங்கு நோயாளிகளுக்கு ரத்தம் உறையும் தன்மை குறையும். இதனால் ஈறுகளில் ரத்தம் கசியலாம். இது கொரோனா நோயாளிகளுக்கு இருக்காது. அதேபோன்று தட்டனுக்கள் எண்ணிக்கையும் டெங்கு நோயாளிகளின் குறைந்து காணப்படும்.

டெங்கு மற்றும் கொரோனா பிரித்தறிய சவாலானது என்பதால் மூன்று நாட்கள் தொடர்ந்து அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது அவசியம் என்கிறார் மருத்துவர் ஸ்பூர்த்தி அருண்.

கொரோனாவை போல டெங்குவும் பல உறுப்புகளை பாதிக்கக்கூடும். அதே போன்று பெரும்பாலானவர் அறிகுறிகள் இல்லாமலும் லேசான அறிகுறிகளுடன் குணமாகிவிடுவதும் உண்டு.கொரோனாவுக்கு ஆர்டிபிசிஆர் சோதனை செய்யப்படும். டெங்குவை ரத்த பரிசோதனைகள் மூலம் அறிகுறிகள் ஆரம்பித்து நான்கு ஐந்து நாட்களில் தெரிந்து கொள்ளலாம் என்கிறார் மருத்துவர் ஸ்பூர்த்தி அருண்.
Published by:Esakki Raja
First published: