முகப்பு /செய்தி /தமிழ்நாடு / Alert : தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு! 500-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை

Alert : தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு! 500-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை

டெங்கு காய்ச்சலை பொருத்தவரை, பாரசிட்டமால் மாத்திரை எடுத்துக் கொண்டாலும் குணம் அடையாது. பாதிக்கப்பட்ட 3வது அல்லது 4வது நாளில் கண்களைச் சுற்றிலும், தலைக்கு பின்புறமும், உடலிலும் வலி ஏற்படும்.

டெங்கு காய்ச்சலை பொருத்தவரை, பாரசிட்டமால் மாத்திரை எடுத்துக் கொண்டாலும் குணம் அடையாது. பாதிக்கப்பட்ட 3வது அல்லது 4வது நாளில் கண்களைச் சுற்றிலும், தலைக்கு பின்புறமும், உடலிலும் வலி ஏற்படும்.

டெங்கு காய்ச்சலை பொருத்தவரை, பாரசிட்டமால் மாத்திரை எடுத்துக் கொண்டாலும் குணம் அடையாது. பாதிக்கப்பட்ட 3வது அல்லது 4வது நாளில் கண்களைச் சுற்றிலும், தலைக்கு பின்புறமும், உடலிலும் வலி ஏற்படும்.

  • 1-MIN READ
  • Last Updated :

கொரோனா பாதிப்பிலிருந்து தமிழகம் மீண்டு வரும் நிலையில், அடுத்ததாக டெங்கு அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது. நடப்பாண்டில் மட்டும் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். புள்ளி விவரங்களுடன் ஒப்பிடும்போது, கடந்த ஆண்டை விட தற்போது பாதிப்புகள் தீவிரம் அடைந்திருப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது.

செப்டம்பரில் 458 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அக்டோபரில் இந்த எண்ணிக்கை 813 ஆக உயர்ந்துள்ளது. நவம்பரில் தற்போது வரை 326 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் டெங்கு பரவல் சற்று அதிகமாக இருக்கும் என்பதால், சுகாதாரத்துறைக்கு புதிய சவால் ஏற்பட்டுள்ளது.

தற்போது 511 பேர் டெங்கு பாதிப்புக்காக உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இரத்த தட்டையணுக்களை பாதித்து, உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய சக்தி உண்டு என்பதால், டெங்கு பரவல் மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக புதுக்கோட்டை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ஈரோடு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பாதிப்புகள் அதிகரித்துள்ளன.

இதற்கிடையே, டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை சுகாதாரத்துறை ஏற்கனவே தொடங்கி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளன. நடப்பாண்டில் 1.15 லட்சம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட 3 மடங்கு அதிகம்.

டெங்கு பரவலை கட்டுப்படுத்துவது குறித்த சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'நல்ல தண்ணீரில் முட்டையிடும் ஏடிஸ் கொசுக்கள்தான் டெங்குவை பரப்புகின்றன. எனவே பொதுமக்கள் வீட்டை சுற்றி நல்ல தண்ணீர் குறிப்பாக மழை நீர் தேங்குவதை தடுக்க வேண்டும். தெருக்களில் கொசு புகை மருந்து அடிக்கும் பணி நடந்து வருகிறது. டெங்கு காய்ச்சலை பொருத்தவரையில், பாரசிட்டமால் மாத்திரை எடுத்துக் கொண்டாலும் குணம் அடையாது. பாதிக்கப்பட்ட 3வது அல்லது 4வது நாளில் கண்களைச் சுற்றிலும், தலைக்கு பின்புறமும், உடலிலும் வலி ஏற்படும். இவைதான் டெங்குவின் அறிகுறிகள். வீட்டில் உள்ள குழந்தைகளின் கை கால்களை மறைக்கும் வகையில் ஆடைகள் அணிய வேண்டும். கொசு வலைகளை அதிகம் பயன்படுத்துவதன் மூலம் பாதிப்பு ஏற்படுவதை குறைக்கலாம்' என்றனர்.

டெங்கு முன்னெச்சரிக்கை குறித்து பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-

டெங்கு காய்ச்சல் டெங்கு வைரஸ் கிருமியால் ஏற்படும் ஒருவகை காய்ச்சம். இது ஏற்பட்டாலே உயிரிழப்பு ஏற்படும் என்பது தவறான கருத்தாகும். டெங்கு காய்ச்சலை முழுமையாக குணப்படுத்த முடியும். ஏடிஸ் என்ற கொசுவால் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவுகிறது. இந்த கொசு நல்ல தண்ணீரில் மட்டுமே உருவாகி, பகலில் மட்டுமே கடிக்கக் கூடியது.

பொதுமக்கள் தண்ணீர் சேமித்து வைத்துள்ள குடங்கள், சிமென்ட் தொட்டிகள், டிரம்கள் போன்றவற்றை கொசு புகாதவகையில் மூடி வைக்க வேண்டும். தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகளை வாரம் ஒரு முறை பிளிச்சிங் பவுடர் கொண்டு நன்றாகத் தேய்த்து கழுவி கொசு புகாதவாறு மூடி வைக்க வேண்டும். மேலும் தங்கள் வீடுகளை சுற்றியுள்ள பகுதிகளில் கிடக்கும் பழைய டயர். தேங்காய் சிரட்டை, ஆட்டுக்கல், பிளாஸ்டிக் கப், பெயிண்ட் டப்பா போன்றவற்றை அகற்றிட வேண்டும்.

காய்ச்சல் கண்டவுடன் அருகிலுள்ள அரசு மருத்துவமனையை உடனடியாக அணுக வேண்டும். மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் மருந்து மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதை அறவே கைவிட வேண்டும். பகலிலும் சிறு குழந்தைகளை கொசு வலைக்குள் தூங்க வைக்க வேண்டும்.

First published:

Tags: Dengue, Dengue fever