ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சிவகங்கையில் பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட 4.8 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய 1000 ரூபாய் நோட்டு பறிமுதல்... பெண் உட்பட 3 பேர் கைது

சிவகங்கையில் பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட 4.8 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய 1000 ரூபாய் நோட்டு பறிமுதல்... பெண் உட்பட 3 பேர் கைது

சிவகங்கையில் பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட 4.8 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய 1000 ரூபாய் நோட்டு பறிமுதல்

சிவகங்கையில் பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட 4.8 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய 1000 ரூபாய் நோட்டு பறிமுதல்

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே மாற்றுவதற்காக எடுத்துவந்த பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 4.8 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய 1000 ரூபாய் நோட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்ததுடன் 3 பேரை கைது செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

செங்கல்பட்டை சேர்ந்த சுரேஷ்குமார் மனைவி வரலெட்சுமி இவர்கள் தொண்டு நிறுவனம் நடத்திவருவதாக கூறப்படுகிறது. இவரிடம் 4 கோடியே 80 லட்சம் மதிப்பிலான பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய 1000 ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளது. இதனை மாற்ற ஆள் தேடிக்கொண்டிருந்த நிலையில் சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலை அடுத்துள்ள வலையம்பட்டி கிராமத்தை சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் மருத்துவரான அருள் சின்னப்பன் என்பவர் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி தருவதாக வரலெட்சுமிக்கு தகவல் கிடைக்கவே அவரை அருள் சின்னப்பனை தொடர்புகொண்டுள்ளார்.

அத்துடதுடன் அந்த பணக்கட்டுகளை 4 பைகளில் எடுத்துக்கொண்டு வலையம்பட்டிக்கு தனது உறவினரான அசோக்குமாருடன் வந்துள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைக்கவே எஸ்.பியின் தனிப்படை சம்பவ இடத்திற்கு சென்றதுடன் 4.8 கோடி மதிப்பிலான பணப்பையை கைப்பற்றியது.

அதன் பிறகு  வரலெட்சுமி, அவரது உறவினர் அசோக்குமார் மற்றும் பிசியோதெரபிஸ்ட் அருள் சின்னப்பன் ஆகியோரை அழைத்துவந்து காளையார்கோவில் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இந்த தகவல் அறிந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜராஜன் காவல்நிலையம் வந்து விசாணை மேற்கொண்டார். அதன் பிறகு அவர்கள் 3 பேரையும் கைது செய்யவும் உத்தரவிட்டார்.

மேலும் படிக்க...மக்கள் தாக்கியதில் வழிப்பறி திருடன் உயிரிழப்பு.. 2 பேர் கைது..

இதனை தொடர்ந்து பணம் பறிமுதல் செய்ததுடன் 3 பேரையும் காளையார்கோவில் காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். பணம் மதிப்பிழப்பு செய்யப்பட்ட 4.8 கோடி மதிப்பிலான பழைய 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Published by:Vaijayanthi S
First published:

Tags: Crime | குற்றச் செய்திகள், Demonetisation, Sivagangai