ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் அருகே பாலாற்றங்கரையை ஒட்டி நீர்பிடிப்பில் அமைந்துள்ள சாதிக் பாஷா நகர் என்ற குடியிருப்பு பகுதியில் மொத்தமாக 347 வீடுகளை ஏசிபி உதவியோடு இடித்து அகற்றப்பட்டு வருகின்றன.
மேல்விஷாரம் அருகே பாலாற்று கரையோரம் சாதிக் பாஷா நகர் என்ற குடியிருப்பு பகுதிகளில் 300க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதி நீர்பிடிப்பு புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ளதால், பாலாற்றில் வெள்ளம் ஏற்படும்போது பாதிக்கப்படுகிறது. இதனால் இந்த குடியிருப்புகளை முழுமையாக இடித்து அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குடியிருப்புகள் முழுமையாக அகற்றும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
காலை முதல் ஜேசிபி உதவியோடு காலி செய்யப்பட்ட வீடுகள் ஒவ்வொன்றாக இடித்து அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் இடிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்று இடத்தை தேர்வு செய்து வீடு இழந்தவர்களுக்கு வழங்கப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
செய்தியாளர் : க.சிவா, ராணிப்பேட்டை
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.