அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாளுக்கு நீட்டிக்க நீதிமன்றத்தில் முறையீடு

Web Desk | news18
Updated: August 13, 2019, 12:37 PM IST
அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாளுக்கு நீட்டிக்க நீதிமன்றத்தில் முறையீடு
அத்திவரதர்
Web Desk | news18
Updated: August 13, 2019, 12:37 PM IST
அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் அனந்தசரஸ் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதர் சிலை எடுக்கப்பட்டு 48 நாட்கள் தரிசனத்துக்கு வைக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருவது வழக்கம்.

அதேபோல 40 ஆண்டுகளுக்கு பின் கடந்த ஜூலை 1-ம் தேதி குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட பக்தர்கள் தரிசனத்துக்கு வைக்கப்பட்டது. இந்நிலையில் 48-வது நாளான ஆகஸ்ட் 17-ல் அத்திவரதர் சிலை மீண்டும் குளத்தில் வைக்கப்பட உள்ளது என்று அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில் முதியோர் உள்ளிட்ட லட்சக்கணக்கானவர்கள் இன்னும் அத்திவரதரை தரிசிக்காத காரணத்தால் தரிசன உற்சவத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் நீதிபதி ஆதிகேசவலு முன் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கை முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் ஒப்புதல் வழங்கியுள்ளனர்.

மேலும் படிக்க... 44-ம் நாளான இன்று இளம் பச்சை-ஆரஞ்சு நிற பட்டாடையில் காட்சியளிக்கும் அத்திவரதர்

Loading...


அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...