பிரபல தனியார் விவசாய நிறுவனமான PACL சொத்துக்களை ஏலம் விடப் போவதாக தனது இணைய வழி மூலமாக விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் கொல்லிமலை தாலுக்காவில் குண்டூர் நாடு, தேவனூர் நாடு, வாழவந்தி நாடு பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் 7000 ஏக்கர் பழங்குடி மக்கள் நிலங்கள் உள்ளன.
இதில் அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் டி-கார்டு பட்டா நிலங்களாக உள்ள இவற்றை ஏலம் விடுவதாக இணையதளத்தில் அறிவித்துள்ள நிலையில், பழங்குடி மக்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களை வேறு யாரும் வாங்கக்கூடாது; பழங்குடிகள் பாதுகாப்பு சட்டத்தின்படி இந்த நிலங்களை ஏலம் விடக்கூடாது எனக்கூறி அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மேலும், மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்தி ஏலம் விடுவதில் இருந்து தங்களை பாதுகாத்து, தங்களுக்கு வாழ்வுரிமை வழங்க வேண்டும் எனவும் அப்படி மாற்றம் செய்யப்பட வில்லை என்றால் தொடர் போராட்டங்களை மேற்கொள்வோம் எனவும் மலைவாழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.
கொல்லிமலை பழங்குடியின மக்களின் நிலங்களை PACL கம்பெனி போலிப் பத்திரம் செய்ததை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி தமிழ்நாடு பழங்குடியினர் மக்கள் நல முன்னேற்ற சங்கம் சார்பில் 1000 க்கும் மேற்பட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு பழங்குடியின மக்கள் நல முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தங்கராஜ் முன்னிலையில், PACL கம்பெனி பதிவு செய்துள்ள பழங்குடியின மக்களின் நிலங்களை, போலி பத்திரங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் பழங்குடி மக்கள் பயிர் செய்துவரும் நிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கண்டிஷன் பட்டாக்களை மாற்றி பட்டா வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா, ராதாகிருஷ்ணன் ஆகியோர் 2012இல் வழங்கிய தீர்ப்பின் படி பழங்குடியின நிலங்களை வேறு யாரும் வாங்க முடியாது. குறிப்பாக கம்பெனிகள் வாங்க முடியாது என்று தெளிவாக கூறியுள்ளனர்.
இவ்வளவு சட்டங்கள் அரசு ஆணை உத்தரவுகள் இருந்தும், பழங்குடியின மக்கள் நிலங்களை மோசடியாக PACL கம்பெனி பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது என்பது மிகப்பெரிய மோசடியாகும் எனவே இந்த மோசடி ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Must Read : 600 தட்டுகளில் லாரியில் வந்த சீர்வரிசை.. கெத்து காட்டிய அத்தைகள் - பிரம்மாண்டமாக நடந்த மஞ்சள் நீராட்டு விழா!
இருந்த போதிலும், பட்டா மாற்றம் செய்யும் போது வில்லங்கத்தில் தனியார் விவசாய நிறுவனம் பெயர் வருகிறது. ஆகையினால் மாவட்ட நிர்வாகம் இதனை போர்க்கால அடிப்படையில் ஆராய்ந்து மலைவாழ் மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் நிலத்தை மீட்டுத்தர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் - ஆர்.ரவிக்குமார், நாமக்கல்.இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.