மத வழிபாட்டு கூடங்கள் திறந்திருக்கும் நேரத்தை அதிகப்படுத்த மஜக கோரிக்கை

மத வழிபாட்டு கூடங்கள் திறந்திருக்கும் நேரத்தை அதிகப்படுத்த மஜக கோரிக்கை

தொழுகை

மத வழிபாட்டு கூடங்களை இரவு பத்து மணி வரை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சி தமிழக தலைமை செயலாளரிடம் கோரிக்கை வைத்துள்ளது.

 • Share this:
  மத வழிபாட்டு கூடங்களை இரவு பத்து மணி வரை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சி தமிழக தலைமை செயலாளரிடம் கோரிக்கை வைத்துள்ளது.

  இது தொடர்பாக மஜக வெளியிட்டுள்ள அறிக்கையில், “இரண்டாம் கட்ட கொரோணா பரவலை கருத்தில் கொண்டு அரசு, தளர்வுகளுடன் கூடிய புதிய கட்டுபாட்டுகளை அறிவித்துள்ளது, அதன்படி மத வழிப்பாட்டு கூடங்கள் இரவு எட்டு மணிவரை மட்டும் அனுமதிக்கபடும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

  கடுமையான நோய் தொற்று காலத்தில் சிறப்பான நடவடிக்கைகள் மூலமாக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவது ஆறுதல் அளிக்கின்றது. அதே நேரத்தில் புனித ரமலான் மாதம் நெருங்கும் இந்த நேரத்தில் மத வழிபாட்டு கூடங்களை இரவு பத்து மணி வரை திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வழியுறுத்தி இன்று தமிழக அரசின் தலைமை செயலாளரை சந்தித்து மஜக சார்பில் மனு அளிக்கப்பட்டது.

  தலைமை செயலாளரின் அறிவுறுத்தலின் பெயரில் அரசு முதன்மை செயலாளர் மற்றும் பொது துறை செயலர் உயர்திரு. செந்தில் குமார் இஆப அவர்களை மஜக மாநில துணைப்பொதுச்செயலாளர் தைமிய்யா அவர்கள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

  Must Read :  நாளை முதல் நின்றுகொண்டு பயணிக்க தடை - சென்னையில் கூடுதலாக 400 பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்து கழகம் முடிவு

   

  இது குறித்து தலைமை செயலாளர் தலைமையில் நடைபெறும் அவசர ஆலோசனை கூட்டத்தில் விவாதித்து நல்ல பதில் தருவதாக திரு.செந்தில் குமார் இ.ஆ.ப உறுதி அளித்தார். உடன் மஜக மாநில துணைச்செயலாளர் திருமங்கலம் ஷமீம் அகமது உடன் இருந்தார்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Suresh V
  First published: