ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Headlines Today : அதிமுகவில் வலுக்கும் ஒற்றைத் தலைமை கோரிக்கை - தலைப்புச் செய்திகள் (ஜூன் 16, 2022)

Headlines Today : அதிமுகவில் வலுக்கும் ஒற்றைத் தலைமை கோரிக்கை - தலைப்புச் செய்திகள் (ஜூன் 16, 2022)

ஓபிஎஸ்-இபிஎஸ்

ஓபிஎஸ்-இபிஎஸ்

Headlines Today : அதிமுகவில் இரட்டைத் தலைமைதான் தொடர வேண்டும் என ஓபிஎஸ் தரப்பும், ஒற்றைத் தலைமையே வேண்டும் என ஈபிஎஸ் தரப்பும் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

அதிமுக-வுக்கு ஒற்றைத் தலைமை காலத்தின் கட்டாயம் என்றும் வரும் 23 ஆம் தேதி நல்ல தகவல் கிடைக்கும் என்றும் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

அதிமுக-வில் ஒற்றைத் தலைமை குறித்து ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோரின் இல்லங்களில் தனித்தனி ஆலோசனை இரவு வரை நீடித்தது.

தமிழ்நாட்டில் 3 மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்றுக்கு உயிரிழப்பு பதிவாகி உள்ளது.

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

டெல்லியில் எதிர்க்கட்சிகள் சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரை ஆதீனம் மீது கை வைத்து பார்த்தால் பிரதமர் நரேந்திர மோடி என்ன செய்வார் என்பது தெரியும் என்று அமைச்சர் சேகர்பாபுவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார்.

ஈரோட்டில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் தனியார் உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் அதை தற்காலிகமாக மூட உத்தரவிட்டனர்.

61 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற தூத்துக்குடி மீனவர்களுக்கு குறைந்த அளவே மீன்கள் கிடைத்துள்ளது.

கொடைக்கானலில் காலி மதுபாட்டில்களை டாஸ்மாக் கடையில் கொடுத்து 10 ரூபாயை திரும்பப் பெறும் திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

உதகையில் குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் சுற்றி திரியும் கரடிகள் கூண்டு வைத்து பிடிக்கப்படும் என்று வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் பேரூராட்சி பகுதிகளுக்கு எல்.இ.டி.பல்புகள் வாங்கியதில் 1 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் ஏற்பட்டுள்ள பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருள் நிரப்பிச் சென்றனர்.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 27 நாட்களில் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் 3 கோடியே 40 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக செலுத்தியுள்ளனர்.

வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, ஜாமின் நிபந்தனைகளை 5 நாட்களுக்கு தளர்த்தக்கோரி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உள்நாட்டிலேயே தயாரான கர்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசியை நோயாளிகளுக்கு செலுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தில் பண மோசடி செய்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில் ராகுல் காந்தியை நான்காவது நாளாக நாளை ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ஏலம் விடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

Must Read : தஞ்சாவூரில் கொரோனா பாதித்த 18 வயது இளம்பெண் மரணம்.. 3 மாதங்களுக்கு பிறகு உயிரிழப்பு

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி பாஜகவினர் போராட்ட நடத்திய நிலையில், கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் விரட்டியடித்தனர்.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான டிஜிட்டல் உரிமையை வயாகாம் 18 நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

அயர்லாந்து அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாணடியா நியமிக்கப்பட்டுள்ளார்.

First published:

Tags: ADMK, Headlines, Today news, Top News