தமிழகத்தில் 9 பேருக்கு டெல்டா பிளஸ் வகை வைரஸ் பாதிப்பு - தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தல்

மாதிரிப்படம்

நாடு முழுவதும் 12 மாநிலங்களில் 48 நபர்களுக்கு டெல்டா பிளஸ் வகை பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

  • Share this:
    தமிழ்நாட்டில் 9 நபர்கள் டெல்டா பிளஸ் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகை வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், மதுரை மாவட்டங்களில் நோய் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

    நாடு முழுவதும் கொரோனா 2-வது அலையின் தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில், தற்போது டெல்டா பிளஸ் வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய தொற்றுநோய் தடுப்பு மையத்தின் இயக்குநர் எஸ்.கே.சிங், நாடு முழுவதும் 12 மாநிலங்களில் 48 நபர்களுக்கு டெல்டா பிளஸ் வகை பாதிப்பு இருப்பதாக தெரிவித்தார்.

    அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 20 பேருக்கும், தமிழகத்தில் 9 பேருக்கும் டெல்டா பிளஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. டெல்டா பிளஸ் உருமாறிய கொரோனா குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும். தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளுக்கு இந்த வகை கொரோனாவை எதிர்கொள்ளும் திறன் உள்ளதா என்பது குறித்து இன்னும் ஒரு வாரத்தில் தெரியவரும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதனிடையே டெல்டா பிளஸ் வைரஸ் பரவல் தொடர்பாக தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்புவுக்கு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். அதில், கொரோனா வைரஸ்களின் மரபணுக்களை தொடர்ந்து ஆய்வு செய்வதற்காக 12 நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள ’இன்சாகோக்’ அமைப்பு டெல்டா பிளஸ் வகை வைரஸ் வேகமாக பரவுவதாகவும், நுரையீரல் செல்களோடு ஒட்டிக்கொள்ளுதல், நோய் எதிர்ப்புத் சக்தியை குறைத்தல் ஆகிய தன்மைகளுடன் இருப்பதாகவும் கண்டறியப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    இந்த வகை வைரஸ் சென்னை, காஞ்சிபுரம், மதுரை மாவட்டங்களில் கண்டறியப்பட்டிருப்பதாகவும், இந்த மூன்று மாவட்டங்களில் நோய் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுஇடங்களில் மக்கள் கூடுவதை தடுக்க வேண்டும், கொரோனா பரிசோதனைகளை பரவலாக்க வேண்டும், தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மாதிரிகளை தேவையான அளவு இன்சாகோக்’ அமைப்பின் கீழ் உள்ள ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் ராஜேஷ் பூஷண் கேட்டுக் கொண்டுள்ளார்.

     



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published: