Delta Plus Virus | தமிழகத்தில் டெல்டா ப்ளஸ் கொரோனா தொற்று...

delta plus

இந்தியாவில் பரவ தொடங்கியுள்ள டெல்டா ப்ளஸ் வகை கொரொனா, மூன்றாவது அலைக்கு காரணமாக அமையும் என கூறப்படுகிறது. இதுதொடர்பான விவரங்களை இந்த செய்தி தொகுப்பில் அறியலாம்..

  • Share this:
    கவலையை ஏற்படுத்தக் கூடிய வகையில் இருப்பதாக மத்திய அரசால் அடையாளப்படுத்தப்பட்டு உள்ள, டெல்டா பிளஸ் வகை கொரோனாவால் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் 40-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவில் இரண்டாவது அலைக்கு காரணமான டெல்டா வகை கொரோனாவில் இருந்து, மரபு திரிந்து உருவானதே இந்த புதிய வகை தொற்றாகும்.

    முதல்முறையாக, கடந்த மார்ச் மாதம் ஐரோப்பிய நாடுகளில் இந்த தொற்று கண்டறியப்பட்டது. இந்த வைரசில் K417N என்ற மரபு மாற்றம் ஏற்பட்டுள்ளதால், கூர்மையான புரத கொம்புகளை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதன்மூலம் செல்களை கிழித்துக் கொண்டு பரவும் தன்மை அதிகம் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. டெல்டா மட்டுமின்றி பீடா உள்ளிட்ட வேறு சில மரபு திரிந்த கொரோனாவின் அடையாளங்களும் இதில் உள்ளதால்,  அதிக பரவும் தன்மையுடன், கவலைக்குரிய தொற்று வகையாக டெல்டா ப்ளஸ் காணப்படுகிறது.

    இந்த தொற்று ஏற்பட்டால் வழக்கமான அறிகுறிகளுடன், வயிற்று வலி, குமட்டல், பசியின்மை, வாந்தி, மூட்டு வலி மற்றும் செவி திறன் குறைபாடு போன்றவையும் ஏற்பட வாய்ப்புள்ளது. டெல்டா ப்ளஸ் வகை கொரோனா, அதிகம் பரவும் தன்மையை கொண்டது என கூறப்பட்டாலும், அதற்கான போதிய ஆதாரங்கள் தற்போது வரை இல்லை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் படிக்க... Petrol Diesel Prices | சென்னையில் பெட்ரோலின் விலை 99 ரூபாயை நெருங்கியது..

    அதேசமயம், தடுப்பூசி மற்றும் கடந்த இரண்டு அலைகளின் மூலம் ஏற்பட்ட நோய் எதிர்ப்பு ஆற்றலையும், சிறந்த மருந்துக் கலவைகளின் சிகிச்சையையும் கூட, டெல்டா ப்ளஸ் முறியடிக்கும் என கூறப்படுகிறது. இந்த வகை தொற்று நுரையீரலில் உள்ள உயிரணுக்களில் வலுவான பிணைப்பை ஏற்படுத்தும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

    அதேசமயம், டெல்டா ப்ளஸ் கொரோன தற்போது வரை, இந்தியாவில் கவலை தரக்கூடிய தொற்றாக வகைப்படுத்தப்படவில்லை. டெல்டா மற்றும் பீட்டா வகை கொரோனாவிற்கு எதிராக, கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள், 3 முதல் 8 மடங்கு குறைவான செயல்திறனையே கொண்டிருப்பது கவலையை ஏற்படுத்துகிறது.



    டெல்டா வகை தொற்று இந்தியாவில் ஆரம்பத்தில் மெதுவாக பரவினாலும், இரண்டே மாதங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அந்தவகையில், டெல்டா ப்ளஸ் பாதிப்பு எண்ணிக்கை தற்போது குறைவாக இருந்தாலும்,  பரவும் தன்மை அதிகரித்து கொரோனா மூன்றாவது அலையை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
    Published by:Vaijayanthi S
    First published: