தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்பு

delta plus

இந்தியாவில் இதுவரை 22 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 • Share this:
  தமிழகத்தில் தற்போது வரை ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகைக் கொரோனோ பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.

  இந்தியாவில் கொரோனா 2வது அலை படிப்படையாக குறையத் தொடங்கியுள்ள நிலையில், மூன்றாவது அலை விரைவில் தாக்கக்கூடும் என பலரும் எச்சரித்துள்ளனர். இந்நிலையில், டெல்டா பிளஸ் எனப்படும் உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவத் தொடங்கியுள்ளது.  இந்தியாவில் கண்டறியப்பட்ட ‘பி.1.617.2’ வைரசுக்கு டெல்டா என்று உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டியது.

  இந்த டெல்டா வைரஸ் தற்போது டெல்டா பிளஸ் வைரஸாக உருமாறியுள்ளது. இந்த வகை வைரஸ், தடுப்பூசியின் வீரியத்தை குறைக்கக் கூடியது என்று அண்மையில் மருத்துவர்கள் எச்சரித்திருந்தனர். டெல்டா வகை வைரஸ்க்கு எதிராக, கொரோனா தடுப்பூசிகள் பெரியளவில் பலனளிக்கவில்லை என்று உலக சுகாதார அமைப்பும் தெரிவித்துள்ளது.

  இந்தியாவில் இதுவரை 22 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதில் 16 பேர் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் கேரளா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.  மகராஷ்டிராவின் ரத்னகிரி மற்றும் ஜல்கான், கேரளாவின் பாலகாடு மற்றும் பத்தினம்திட்டா, மத்திய பிரதேசத்தின் போபால் மற்றும் சிவபுரி ஆகிய மாவட்டங்களில் இந்த வகை கொரோனா வைரஸ் பரவியுள்ளது தெரியவந்துள்ளது.

  இந்நிலையில்  மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடக மாநிலத்தில் உருமாறிய டெல்டா பிளஸ் வகை கொரோனோ கண்டறியப்பட்ட நிலையில் தமிழகத்தில் தற்போது வரை ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகைக் கொரோனோ பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்று  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.

  டெல்டா பிளஸ் வைரஸை கவலையளிக்கக் கூடியதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், மேற்கூறிய மூன்று மாநிலங்களிலும் கட்டுப்பாடு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.  எந்தெந்த மாவட்டங்களில் டெல்டா பிளஸ் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதோ அங்கு கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: