• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்தில் உருமாறிய டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் உருமாறிய டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்துவதில் நாட்டிலேயே சென்னை முதலிடம் வகிக்கிறது சென்னை மாநகராட்சிக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    தமிழகத்தில் உருமாறிய டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை என மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

    மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இருந்து சென்னைக்கு 3 லட்சத்து 10 ஆயிரத்து 150 கோவிஷீல்ட் தடுப்பூசி சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி மருந்துகள் சேமிப்பு குளிர்பதன நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.

    Also read: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் விவரங்களை சரியாக வழங்குக: தலைமை செயலாளர் இறையன்பு

    இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்திற்கு மத்திய தொகுப்பில் இருந்து 1.26 கோடி தடுப்பூசிகள் வந்துள்ளது. அதில் 1.17 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. அடுத்த சில தினங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என்ற நிலை தமிழகத்தில் ஏற்படும்.

    தமிழகத்தில் உருமாறிய டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை. படிக்க மற்றும் வேலைக்காக வெளிநாட்டுகளுக்கு செல்பவர்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் முன்னுரிமை அளிக்கப்படும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    உரிய ஆவணங்களுடன் கோவின் செயலியில் பதிவு செய்து, 28 நாட்கள் இடைவெளியில் இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம். இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்துவதில் நாட்டிலேயே சென்னை முதலிடம் வகிக்கிறது சென்னை மாநகராட்சிக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கொரோனா இறப்பை மறைக்கவோ, மறுக்கவோ எண்ணம் இல்லை. அது சாத்தியமும் இல்லை. முகக்கவசம், தனிமனித இடைவெளி, அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடித்தால் கொரோனா மூன்றாம் அலையை தடுக்கலாம் என்று அவர் கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: