• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Delta Plus Virus : தமிழகத்தில் 3 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ்: பாதிப்புக்குள்ளான ஒருவர் பூரண குணமடைந்தார்

Delta Plus Virus : தமிழகத்தில் 3 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ்: பாதிப்புக்குள்ளான ஒருவர் பூரண குணமடைந்தார்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

டெல்டா பிளஸ் வைரசால் பாதிக்கப்பட்ட நபர்கள் கண்டறியப்பட்டால் அந்த பகுதி நோய் கட்டுப்பாட்டு பகுதியாக மாற்றப்படும்.

  • Share this:
    காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியிலுள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒருவர் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பூரண குணம் அடைந்துள்ளார்.

    ஒரகடம் பகுதியிலுள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியை சேர்ந்த ஊழியர் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. கடந்த மே மாதம் 3ஆம் தேதியன்று அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உள்ளதா என பரிசோதனை செய்த நிலையில், தற்போது பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் அவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று பாதிப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    எனினும், கொரேனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட நாளன்றே தண்டலம் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது அவர் பூரண குணமடைந்து வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் என காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் டாக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், தமிழகத்தில் மூன்று பேர் டெல்டா பிளஸ் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் கூறுகையில், சென்னை கொராட்டுர், காஞ்சிபுரம் மற்றும் மதுரையில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

    மேலும், டெல்டா பிளஸ் வைரஸ் பரிசோதனை தமிழகத்தில் செய்ய மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம். தடுப்பூசி செலுத்துவதால் டெல்டா பிளஸ் போன்ற உருமாறிய வைரஸ் கட்டுபடுகிறது. பாதிப்பும் குறைகிறது.

    சமூக வலைதளத்தில் சிறுமி ஒருவருக்கு மருத்துவ தேவைக்காக 16 கோடி தேவைப்படுகிறது நன்கொடை தேவை போன்ற தகவல் பரப்பட்ட வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. டெல்டா பிளஸ் வைரசால் பாதிக்கப்பட்ட நபர்கள் கண்டறியப்பட்டால் அந்த பகுதி நோய் கட்டுப்பாட்டு பகுதியாக மாற்றப்படும் என்று கூறினார்.

    இந்நிலையில், தமிழகத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்பு குறித்த ஆய்வு மேற்கொள்ள மருத்துவர் மோகன் காமேஸ்வரன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சிந்தித்து இடைக்கால அறிக்கையை சமர்பித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் மோகன் காமேஸ்வரன், 13 பேர் கொண்ட மருத்துவ குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது. தமிழகத்தில் கருப்பு பூஞ்சைகளின் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. இதுவரை கருப்பு பூஞ்சை நோயால் 148 பேர் இறந்துள்ளனர் என்று கூறினார்.

    Must Read : அரை மணி நேரத்தில் கொரோனாவை குணப்படுத்தும் மருந்து?... அங்கீகாரம் அளித்திருக்க வேண்டாமா? நீதிமன்றம் கேள்வி

    மேலும், தமிழகத்தில் கருப்பு பூஞ்சைகளின் பாதிப்பு அதிகம் இல்லாததற்கு காரணம் மருத்துவர்கள் குழுவாக துரிதமாக செயல்பட்டு வருகின்றனர் அதேபோல் அதற்கு தேவையான மருந்துகளும் போதிய அளவில் நம்மிடம் உள்ளது. மக்களிடையேயும் கருப்பு பூஞ்சைகள் குறித்த விழிப்புணர்வு நன்றாகவே இருக்கிறது அதனால்தான் கருப்பு பூஞ்சை கட்டுக்குள் உள்ளது. இந்த கருப்பு பூஞ்சை நோய் உரு மாறுவதற்கான வாய்ப்பு இல்லை ஒருவேளை அப்படி அடுத்த அலை வந்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராகவே உள்ளோம்” என்று கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: