Home /News /tamil-nadu /

டெல்டா, ஒமைக்ரான் சேர்ந்து சுனாமி வேகத்தில் பரவுகிறது - அமைச்சர் மா.சுப்ரமணியன்

டெல்டா, ஒமைக்ரான் சேர்ந்து சுனாமி வேகத்தில் பரவுகிறது - அமைச்சர் மா.சுப்ரமணியன்

ஓமைக்ரான் வகை கொரோனா

ஓமைக்ரான் வகை கொரோனா

Omicron | டெல்டா மற்றும் ஒமைக்ரான் தொற்று சேர்ந்து சுனாமி வேகத்தில் பரவி வருகிறது என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த இரண்டு தினங்களில் ராக்கெட் வேகத்தில் எகிறியுள்ளது. இது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அதனையடுத்து, நேற்று உடனடியாக கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டன. இந்தநிலையில், குரோம்பேட்டை எம்.ஐ.டி கல்லூரியில் 81 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அதில் 66 பேருக்கு எஸ் மரபணு மாற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளது. எம்.ஐ.டி வளாகத்தில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் மற்றும் உயர்க்லவித்துறை அமைச்சர் பொன்முடி இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், ‘தமிழகத்தில் டெல்டா மற்றும் ஒமைக்ரான் சுனாமி போல் வேகமாக பரவி வருகிறது. தற்போது பரவி வரும் தொற்றில் 70-80% ஒமைக்ரான் தொற்று தான். 121 பேருக்கு தான் ஒமிக்ரான் மரபணு பகுபாய்வு மூலம் உறுதி செய்யப்பட்டாலும் எஸ் மரபணு மாற்றம் கொண்டவர்களும் ஒமைக்ரான் நோயாளிகளாகவே கருதப்படுகின்றனர்.

    எஸ் மரபணு மாற்றம் கண்டறிய தேவையான டேக் பாத் கிட் 3 லட்சம் கையிருப்பு உள்ளது. அனைத்து இடங்களிலும் இந்த கிட் கொண்டே பரிசோதனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் இன்று 5 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி ஆகும். சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைத் தாண்டும்’ என்று தெரிவித்தார்.

    கொரோனா பாதிப்பால் அஜித் குமாரின் வலிமை ரிலிஸ் ஒத்திவைப்பு - தயாரிப்பாளர் அறிவிப்பு



     அதைத் தொடர்ந்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ‘எம்.ஐ.டி வளாகத்தில் 1,659 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை 81 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 40 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். 41 பேர் விடுதியில் உள்ளனர். 81 பேரில் 66 பேருக்கு எஸ் மரபணு மாற்றம் உள்ளது. மாணவர்கள் உடல் நலம் சீராக உள்ளது. தேவையான மருத்துவ கண்காணிப்பு வழங்கப்படுகிறது. இன்னும் 262 பேருக்கு முடிவுகள் வர வேண்டும். அவர்களும் விடுதியில் உள்ளனர்’ என்று தெரிவித்தார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: CoronaVirus, Omicron

    அடுத்த செய்தி