ரேஷன் கடைகளில் (Ration Shop) பாயிண்ட் ஆப் சேல் கருவியில் கைரேகை பொருந்தவில்லை என்றாலும், பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேரவையில் தெரிவித்துள்ளார்.
தமிழக பட்ஜெட் மீதான விவாதம் சட்டப்பேரவையில் நேற்று முதல் தொடங்கியது. இன்று கேள்வி நேரத்தின்போது சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், தனிநபர் குடும்ப அட்டை வழங்கப்படுமா, ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களின் கைரேகைகள் பொருந்தாத காரணத்தினால் பொருட்கள் வழங்கும் பிரச்சினைகள் நிலவுவதாக கூறினார்.
அதற்கு பதிலளித்துப் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி (MInister Sakkarapani) யாரையும் சாராத தனியாக சமைத்து வாழ்வை நடத்தும் தனிநபர்களுக்கு ரேஷன் கார்டுகள் (Ration Card) வழங்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 19 லட்சத்து 71 ஆயிரத்து 807 தனிநபர் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
Also Read : எல்லா பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசம் என்றால் போக்குவரத்து கழகத்தை எப்படி நடத்துவது? - அமைச்சர் ராஜ கண்ணப்பன்
ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 10 லட்சத்து 92 ஆயிரத்து 604 குடும்ப அட்டைகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளதாகவும், ரேஷன் கடைகளில் பாயிண்ட் ஆப் சேல் கருவியில் கைரேகை பதிவாகவில்லை என்றாலும், பிராக்சி முறையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக கூறினார். பாயிண்ட் ஆப் சேல் கருவியில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறு நிவர்த்தி செய்யபடும் என்று உணவு துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.