Home /News /tamil-nadu /

டெல்லி குடியரசு தின அணிவகுப்பு: தமிழக அரசு சார்பில் பங்குபெறவிருந்த அலங்கார ஊர்தி நிராகரிப்பு!

டெல்லி குடியரசு தின அணிவகுப்பு: தமிழக அரசு சார்பில் பங்குபெறவிருந்த அலங்கார ஊர்தி நிராகரிப்பு!

மிகவும் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்கள் அடங்கிய ஊர்திகளை மட்டும் தான் தங்களால் ஏற்றுக்கொள்ள முடியும் எனவும் மத்திய அரசு அதிகாரிகள் தரப்பில் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் சார்பில் பங்குபெறவிருந்த அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ளது.

    டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ள கோரிக்கை செய்து தமிழக அரசு சார்பில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி, வேலுநாச்சியார், பாரதியார், கப்பலோட்டிய தமிழர் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் உருவப்படங்கள் அடங்கிய ஊர்திகள் காண்பிக்கப்பட்டுள்ளது.

    ஆனால், தமிழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட ஊர்திகள் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட ஊர்திகளில் உள்ள உருவப்படங்களில் பாரதியாரை மட்டுமே தங்களுக்கு தெரிவதாகவும், உலக தலைவர்களுக்கு வ.உ.சி, வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழர் ஆகிய தலைவர்களை தெரியாது.

    மேலும் படிக்க: கோவையில் சிசிடிவி கேமரா பொருத்தாத கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய காவல்துறை பரிந்துரை...

    மிகவும் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்கள் அடங்கிய ஊர்திகளை மட்டும் தான் தங்களால் ஏற்றுக்கொள்ள முடியும் எனவும் மத்திய அரசு அதிகாரிகள் தரப்பில் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த அணிவகுப்பு ஊர்திகளில் தென்மாநிலங்களில் கர்நாடக ஊர்திகள் மட்டும் தான் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகம் மட்டுமல்லாமல் மேற்கு வங்கம், கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் அலங்கார ஊர்திகளும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும் படிக்க: பொங்கல் விடுமுறைக்கு பிறகு கொரோனா அதிகரிக்க வாய்ப்பு- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Central govt, Republic day, Tamil Nadu

    அடுத்த செய்தி