இனி அதிமுக வீறுநடை போட்டு வெற்றிப்பாதையை நோக்கிச் செல்லும் - முதல்வர் பழனிசாமி
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த வெற்றிவேல் குறிப்பிட்டார்.

இரட்டை இலை - அதிமுக சின்னம்
- News18
- Last Updated: February 28, 2019, 6:16 PM IST
இரட்டை இலை சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஒதுக்கி, டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஓ.பி.எஸ்-இபிஎஸ் தரப்புக்கு தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியதை எதிர்த்து, டிடிவி தினகரன் தரப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு மீதான விசாரணையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், கடந்த 8-ம் தேதி நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், இரட்டை இலை சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஒதுக்கி, நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். இரட்டை இலை சின்னம் அதிமுகவுக்கு தான் சொந்தம் என்றும் ஓ.பி.எஸ்- இபிஎஸ் தரப்பு இந்த சின்னத்தை பயன்படுத்தலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை அழித்து விடலாம் என நினைத்தவர்களுக்கு நீதிமன்றம் உரிய பதிலடி கொடுத்திருப்பதாக தெரிவித்தார்.

இரட்டை இலை சின்னம் கிடைத்திருப்பதன் மூலம் இனி அதிமுக வீறுநடை போட்டு வெற்றிப்பாதையை நோக்கிச் செல்லும் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.அதேசமயம், டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் எந்த பாதிப்பும் இல்லையென அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த வெற்றிவேல் கூறியுள்ளார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தீர்ப்பை ஏற்றுக்கொண்ட டிடிவி.தினகரன் தரப்பினர், குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு நீதிபதிகளிடம் வலியுறுத்தினர்.
அப்போது குறிக்கிட்ட தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர், குறிப்பிட்டு குக்கர் சின்னத்தை மட்டும் கேட்பது ஏன் என கேள்வி எழுப்பியதோடு, அந்த சின்னத்தை வழங்க மறுத்தனர். இதையடுத்து உச்சநீதிமன்றத்தை அணுகுமாறு தினகரன் தரப்பினருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
Also see...
ஓ.பி.எஸ்-இபிஎஸ் தரப்புக்கு தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியதை எதிர்த்து, டிடிவி தினகரன் தரப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு மீதான விசாரணையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், கடந்த 8-ம் தேதி நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், இரட்டை இலை சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஒதுக்கி, நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். இரட்டை இலை சின்னம் அதிமுகவுக்கு தான் சொந்தம் என்றும் ஓ.பி.எஸ்- இபிஎஸ் தரப்பு இந்த சின்னத்தை பயன்படுத்தலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
இரட்டை இலை சின்னம் கிடைத்திருப்பதன் மூலம் இனி அதிமுக வீறுநடை போட்டு வெற்றிப்பாதையை நோக்கிச் செல்லும் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.அதேசமயம், டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் எந்த பாதிப்பும் இல்லையென அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த வெற்றிவேல் கூறியுள்ளார்.

வெற்றிவேல்