குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் - விவசாயிகள் உறுதி
குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் - விவசாயிகள் உறுதி
கோப்பு படம்
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதுடன், விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் வரை போராட்டத்தை திரும்பப் பெறப் போவதில்லை என்று விவசாயிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி எல்லைகளில் விவசாயிகள் 6-வது வாரமாக தொடர் போராட்டதில் ஈடுபட்டுள்ளனர். இரவு நேரத்தில் உறைபனி நிலவுவதால், தீ மூட்டி குளிர்காய்ந்தபடி போராடி வருகின்றனர். சிங்கு எல்லையில் முற்றுகையிட்டுள்ள விவசாயிகள், நள்ளிரவு 12 மணியளவில் மெழுகுவர்த்தி ஏற்றி புத்தாண்டை வரவேற்றனர். போராட்டக்களத்தின் அருகே வாணவேடிக்கைகளும் களைகட்டின. அதன்பிறகு விவசாயிகள் "நாகர் கீர்த்தன்" எனப்படும் பக்தி பாடல்கள் பாடினர். திக்ரி எல்லையில் நாகர் கீர்த்தன் நிகழ்ச்சியில் பங்கேற்ற விவசாயிகள், பின்னர் அரைநிர்வான போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் கிசான் மஸ்தூர் சங்கத்தினர் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதுடன், விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் வரை போராட்டத்தை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
இதனிடையே, ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பல்ஜித் கவுர், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக 15 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து ஸ்கடைவிங் செய்து, வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கம் எழுப்பினார்.
வரும் 4-ம் தேதி மத்திய அரசு மற்றும் விவசாயிகள் இடையே 7வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. 6-வது கட்ட பேச்சுவார்த்தையின் போது மின்சார சட்டத் திருத்தத்தை கைவிடவும், பயிர் கழிவுகளை எரிக்கும் விவசாயிகளுக்கு அபராதம் விதிக்கும் முடிவுகளை கைவிடவும் மத்திய அரசு ஒப்புக்கொண்டது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.