முகப்பு /செய்தி /தமிழ்நாடு / புதுமைப்பெண் திட்டம் புரட்சிகரமான திட்டம் - முதல்வர் ஸ்டாலினுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் புகழாரம்!

புதுமைப்பெண் திட்டம் புரட்சிகரமான திட்டம் - முதல்வர் ஸ்டாலினுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் புகழாரம்!

முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தகைசால் பள்ளிகளை அமைக்க 3 ஆண்டுகள் பிடிக்கும் என தான் நினைத்திருந்த நிலையில் 6 மாதங்களில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் பாராட்டு தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

அரசுப்பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவிகள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த புதுமைப்பெண் திட்டத்தின் தொடக்க விழா சென்னை ராயபுரத்தில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை, முதலமைச்சர் ஸ்டாலின் மலர் கொத்து அளித்து வரவேற்றார். பின்பு, மாநிலம் முழுவதும் முதற்கட்டமாக அமைக்கபட உள்ள 26 தகைசால் பள்ளிகள் மற்றும் 15 மாதிரி பள்ளிகளுக்கான திட்டத்தை அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து, புதுமைப்பெண் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், சில மாணவிகளுக்கு வங்கி கணக்கிற்கான டெபிட் கார்டுகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், புதுமைப்பெண் திட்டம் மாணவிகளின் இடைநிற்றலை தவிர்க்கும் புரட்சிகரமான திட்டம் என கூறினார். இந்தியா முழுவதும் புதுமைப்பெண் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். தகைசால் பள்ளிகளை அமைக்க 3 ஆண்டுகள் பிடிக்கும் என தான் நினைத்திருந்த நிலையில் 6 மாதங்களில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக பாராட்டு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவதை அரசு செலவாக கருதவில்லை எனவும், எதிர்காலத்திற்கான முதலீடாகவே பார்ப்பதாகவும் கூறினார். இந்த திட்டத்தின் மூலம் பெண் கல்வி மேம்படும் என்றும், பாலியல் சமத்துவம் ஏற்பட்டு, குழந்தை திருமணம் தடுக்கப்படும் என்றும் கூறினார். மாணவிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பட்டப்படிப்புகளை படிப்பதோடு, தகுதியான வேலைக்கும் செல்ல வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

First published:

Tags: Arvind Kejriwal, CM MK Stalin, Higher education