Home /News /tamil-nadu /

தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி - 2வது நாள் போட்டியில் டெல்லி, பஞ்சாப் அணிகள் வெற்றி

தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி - 2வது நாள் போட்டியில் டெல்லி, பஞ்சாப் அணிகள் வெற்றி

தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி

தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி

Kovilpatti : கோவில்பட்டியில் நடந்துவரும் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி 2வது நாள் போட்டியின் முதல் ஆட்டத்தில் டெல்லி அணியும், 2வது ஆட்டத்தில் பஞ்சாப் அணியும் வெற்றி.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் நடைபெற்று வரும் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி 2வது நாள் போட்டியில் இன்று காலையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் டெல்லி அணியும், 2வது ஆட்டத்தில் பஞ்சாப் அணியும் வெற்றி பெற்றுள்ளன.

கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில், நேற்று முதல் ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சார்பில், 12-வது தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கிப் போட்டி நடைபெற்று வருகிறது.

2வது நாளான இன்று காலையில் நடைபெற்ற முதல் போட்டியில் ஹெச் பிரிவில் இடம் பெற்றுள்ள டெல்லி - உத்தரகாண்ட் ஹாக்கி அணிகள் மோதின. போட்டி தொடங்கியதும் இரு அணிகளும் சமபலத்துடன் மோதின. போட்டியின் 14வது நிமிடத்தில் உத்தரகாண்ட் அணியின் விஷால் குமார் முதல் கோல் அடித்து அணியை முன்னிலை படுத்தினார்.

இருந்த போதிலும், டெல்லி அணி வீரர்கள் ஆக்ரோஷமாக அடி அடுத்தடுத்து கோல்களை அடிக்க தொடங்கினார். டெல்லி அணி வீரர் நிதின் 2கோல்கள் அடித்தார். அதே அணியை சேர்ந்த ரோஹித், விகாஸ், சகில்குமார், கே.ரோஹித், நவீன் ஆகியோர் தலா ஒரு கோல்கள் அடித்தார். பதிலுக்கு உத்தரகாண்ட் அணியினால் ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது. போட்டியின் இறுதியில் 7 - 2 என்ற கோல்கணக்கில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி


இதனை தொடர்ந்து நடைபெற்ற 2வது போட்டியில்  எப் பிரிவில் உள்ள பஞ்சாப் மற்றும் ஆந்திர பிரதேச ஹாக்கி அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியது முதல் போட்டி பஞ்சாப் அணி வீரர்கள் கைவசமே இருந்தது.

Must Read : பேரறிவாளன் விடுதலை: மாநில சுயாட்சி மாண்புக்கு இலக்கணமாக அமைந்த தீர்ப்பு - மு.க. ஸ்டாலின்

பஞ்சாய் அணி வீரர்கள் அபிதீப் சிங், பிரதீப் சிங், குரூபாசிசிங் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து அணிக்கு வெற்றியை தேடி தந்தனர். 3  - 0 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
Published by:Suresh V
First published:

Tags: Hockey, Kovilpatti, Sports, Thoothukudi

அடுத்த செய்தி