Home /News /tamil-nadu /

டெல்லியில் 3-வது நாளாக அபாயகரமான நிலையில் காற்று...!

டெல்லியில் 3-வது நாளாக அபாயகரமான நிலையில் காற்று...!

கோப்புப் படம்

கோப்புப் படம்

டெல்லியில் தீபாவளி பண்டிகைக்குப் பிறகு காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளது.

  • News18
  • Last Updated :
    டெல்லியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக காற்றின் தரக்குறியீடு மோசமாகவே இருப்பது தெரியவந்துள்ளது. 

    பஞ்சாப், அரியானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் வைக்கோல் எரிப்பு சம்பவங்களால் காற்று மாசு கடுமையாக பாதிப்படைந்தது.

    அதைத் தொடர்ந்து, நீதிமன்றம் தலையிட்டு கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தது. எனினும் டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள காசியாபாத், பரீதாபாத், குருகிராம் மற்றும் நொய்டா பகுதிகள் கரும்புகையால் சூழ்ந்து காணப்படுகின்றன.

    நொய்டாவில் அதிகபட்சமாக காற்றின் அளவு 583-கவும் டெல்லி விமான நிலையத்தில் 508 ஆகவும், டெல்லி பல்கலைக்கழகத்தில் 494 ஆகவும் பதிவாகியிருந்தது.

    தரக்குறியீடு நூறை கடந்தாலே அபாயகரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் கடந்த மூன்று நாட்களாக காற்று மாசு மிக அபாயகர நிலையில் இருந்து வருகிறது.

    Also see...
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Air pollution

    அடுத்த செய்தி