கோயம்பேடு பேருந்து நிலைய கழிவறைகளில் தண்ணீர் தட்டுப்பாடு! பயணிகள் அவதி

தொலைதூரத்தில் இருந்து வருபவர்கள் மற்றும் செல்வோர் நடைமேடை அருகில் உள்ள கழிவறைகளைப் பயன்படுத்துகின்றனர்.

கோயம்பேடு பேருந்து நிலைய கழிவறைகளில் தண்ணீர் தட்டுப்பாடு! பயணிகள் அவதி
கோயம்பேடு பேருந்து நிலையம்
  • News18
  • Last Updated: August 13, 2019, 8:28 PM IST
  • Share this:
கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறைகளில் தண்ணீர் வசதி இல்லாததால் பயணிகள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இங்கிருந்து, கர்நாடகா, கேரளா, ஆந்திரப் பிரதேசம், புதுச்சேரி ஆகிய வெளிமாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தொலைதூரத்தில் இருந்து வருபவர்கள் மற்றும் செல்வோர் நடைமேடை அருகில் உள்ள கழிவறைகளைப் பயன்படுத்துகின்றனர்.

ஏற்கனவே, இவை முறையாக பராமரிக்கப்படாமல் அசுத்தமாக உள்ளன என பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். தற்போது, வறட்சி காரணமாக புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறைகளுக்கு முறையாக தண்ணீர் விநியோகிப்பதில்லை என கூறியுள்ளனர். அவசரத்திற்கு இயற்கை உபாதை கழிக்க முடியாமல் கடும் இன்னலுக்கு ஆளாளவதாகவும், அதனால் 10 ரூபாய்க்கு விற்கப்படும் தண்ணீர் பாட்டிலை வாங்கிச் சென்று பயன்படுத்துவதாகவும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.


Also see:

First published: August 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்