• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கஜா புயல் மீட்புப் பணிகளுக்கு தமிழக அரசு ராணுவ உதவி கேட்கவில்லை - நிர்மலா சீதாராமன்

கஜா புயல் மீட்புப் பணிகளுக்கு தமிழக அரசு ராணுவ உதவி கேட்கவில்லை - நிர்மலா சீதாராமன்

அமைச்சர் நிர்மலா சீதாராமன்

அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Cyclone Gaja | நாகப்பட்டினத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஆய்வு செய்யவுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கஜா புயல் மீட்புப் பணிகளுக்காக தமிழக அரசு ராணுவ உதவி கேட்கவில்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிடுகிறார். முதற்கட்டமாக நேற்று ஹெலிகாப்டர் மூலம் கோடியக்கரைக்கு மாலை 4:00 மணிக்கு வந்த அவர், உப்பு உற்பத்தியாளர்களை சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அதன் பின்னர் அங்கிருந்து வேதாரண்யம், அகஸ்தியம்பள்ளிக்கு சென்று, புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டதுடன், பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அதை தொடர்ந்து, ஆற்காட்டுத்துறை, நிவாரண முகாமில் தங்கியுள்ளவர்களை சந்தித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், வீடுகளை இழந்துள்ள, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், இவர்கள் அனைவருக்கும் வீடு கட்டித்தர மத்திய அரசு முடிவு செய்துள்ளாகவும் தெரிவித்தார்.

நாகையில் ஆய்வு முடிந்துக்கொண்ட அமைச்சர் நிர்மலா சீதாராமன் திருத்துறைப்பூண்டி சென்றார். அதன்பின் திருவாரூரில் ஆய்வு மேற்கொண்ட  அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது புயல் மீட்புப் பணிகளுக்காக, தமிழக அரசு ராணுவ உதவியை கேட்கவில்லை என்றார். இப்போது கேட்டால் மத்திய அரசு உதவ தயாராத இருப்பதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதையடுத்து, தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்யவுள்ளார்.

Also see... அரசு பள்ளியில் பழங்குடி ஆடைகளை அணிந்து வரும் ஊட்டி மாணவர்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: